குரங்குகள் கூட இதை செய்யாது.. இம்ரான் கானா இருந்தா எங்களை விடமாட்டார் – வாசிம் அக்ரம் விமர்சனம்

0
379
Wasim

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்து பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோலி சதம் அடிக்க பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கும் தகுதி பெற்றது. இந்த குறிப்பிட்ட போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிக மந்தமாக இருந்தது.

- Advertisement -

கணக்கில்லாத சீர்திருத்தங்கள்

சமீப காலத்தில் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வுக்குழுவினர், மேலும் வீரர்கள் என நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இடையில் பாகிஸ்தான் ஃபீல்டிங்கை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய முயற்சிகள் செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் ஏதாவது ஒரு மாற்றங்கள் உறுதியாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடந்தது.

இருந்த போதிலும் கூட பாகிஸ்தான் தேசிய அணி குறிப்பிட்ட வெற்றிகளை பெற முடியாமல் தடுமாறி வந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை வென்று நம்பிக்கை கொடுத்தது. இந்த நிலையில் இளம் வீரர் சையும் அயூப் காயம் அடைய, மீண்டும் பாகிஸ்தான் அணி படுதோல்விகளை சந்தித்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

குரங்குகள் கூட இதை செய்யாது

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், அணிக்கு இளம் வீரர்களை கொண்டு வர வேண்டும் எனவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இடைவேளை நேரத்தின் போது நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க : 15 பேர் அறிவிச்ச போதே.. பாக் அணி தொடரை விட்டு வெளியே போயிடுச்சு.. பாபர் இதை வச்சு ஏமாற்றுகிறார் – டேனிஷ் கனேரியா

வாசிம் அக்ரம் தனது விமர்சனத்தில் ” இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இரண்டாவது ட்ரிங்ஸ் பிரேக் என்று நினைக்கிறேன், அப்பொழுது ஒரு தட்டு நிறைய வாழைப்பழங்கள் களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு கொண்டுவரப்பட்டது. உண்மையில் குரங்குகள் கூட இவ்வளவு வாழைப்பழத்தை திங்காது. இதுவே எங்களுடைய கேப்டன் இம்ரான் கானாக இருந்திருந்தால் எங்களை அடித்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -