இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் கலந்து கொள்ளும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் – எந்த அணிக்கு தெரியுமா ?

0
95
Washington Sundar County Cricket

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஒரு வளர்ந்து வரும் ஆப்-ஸ்பின் ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரைப் பார்த்தது இந்திய அணி நிர்வாகம். ஆனால் ரிஷாப் பண்ட்டை போலவே இவரும் யாரும் எதிர்பார்க்காத மாதிரி டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தார்!

2020-21ஆம் ஆண்டில் இளம் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற, அஷ்வினுக்குப் பதில் விளையாடிய வாஷிங்கடன் சுந்தரும் ஒரு முக்கியக் காரணம். அதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாட கிடைத்த வாய்ப்பிலும் மிகச்சிறப்பாகவே செயல்பட்டார்.

- Advertisement -

கடந்த 2021 ஆம் வருடம் இந்திய அணி இங்கிலாந்திற்கு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சென்ற பொழுது, அதற்கு முன்னரே இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர் விளையாடினார். இந்திய அணியில் அவரது பெயரும் இடம் பெற்றது. ஆனால் கால் விரலில் பட்ட காயத்தால் அந்தத் தொடரில் துரதிஷ்டவசமாக விளையாட முடியவில்லை.

காயம் என்பது வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சக அணிவீரர் போலவே தொடர்கிறது.இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அடுத்து 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல் இரண்டாம் கட்டப் போட்டிகள் யு.ஏ.இ-ல் தொடங்கப்பட அதிலும் சுந்தரால் பங்கேற்க முடியவில்லை. அதற்கடுத்த உடனே அங்கேயே நடந்த டி20 உலகக்கோப்பையிலும் விளையாட முடியவில்லை.

அடுத்த ஆண்டான 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உள்நாட்டு ஒருநாள் போட்டி தொடரான விஜய் ஹசாரே தொடரில் தனது சிறப்பான ஆல் ரவுண்ட் பங்களிப்பின் மூலம் தமிழக அணி இறுதிபோட்டிக்குச் செல்ல உதவினார். இதனால் தென்ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் கோவிட் தாக்க அந்த வாய்ப்பும் பறிபோனது.

- Advertisement -

அடுத்து அதே 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடந்த வெஸ்ட் அணிக்கு எதிராக நடந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வாய்ப்பு பெற்று, மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்டும், 57 ரன்களும் அடித்தார். இந்தத் தொடரில் தொடையில் காயம் ஏற்பட்டு வெளியேறினார்.

இதற்கடுத்து மார்ச் மாதம் இறுதியில் துவங்கிய ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணிக்காகக் களமிறங்கி, விரல்கள் இடையில் காயம் ஏற்பட்டு, பின்பு மூன்று ஆட்டங்கள் ஓய்வெடுத்துவிட்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறி, இந்திய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பின் கீழ் தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் ஆகியவர்களோடு சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்தார்.

இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் காயம் சரியாகி மீண்டும் இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் விளையாட, இங்கிலாந்திற்குப் பறக்க உள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. வாஷிங்டன் சுந்தர் கவுன்டி போட்டிகளில் பிரபலமான அணியான லங்காஷையர் அணிக்காக விளையாடுவார் என்று தெரிகிறது!