206 ரன்.. ஹெட் மின்னல் பேட்டிங்.. டிஎஸ்கே அணியை மடக்கிய சிஎஸ்கே ரவீந்தரா.. வாஷிங்டன் அணி அபார வெற்றி

0
3197
Head

தற்போது அமெரிக்காவில் எம்எல்சி டி20 லீக் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் வாஷிங்டன் பிரீடம் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் வாஷிங்டன் பிரீடம் அணி அதிரடியான வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். வாஷிங்டன் பிரீடம் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த டிராவிஸ் ஹெட் முதல் 4.3 ஓவர்களில் அதாவது முதல் 27 பந்துகளில் 22 பந்துகளை தானே சந்தித்து அதிரடியாக 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 40 பந்துகளில் 57 ரன்கள், கிளன் மேக்ஸ்வெல் 23 பந்தில் 34 ரன்கள், பியனார் 21 பந்தில் 33* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் வாஷிங்டன் பிரீடம் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் நூர் அகமது 3, டேரன் பிராவோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 10 பந்தில் 16 ரன்கள், மூன்றாவதாக வந்த ஆரோன் ஹார்டி 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

ஒரு இன்னொரு துவக்க ஆட்டக்காரராக வந்த கேப்டன் பாப் டு பிளேசிஸ் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து போராடினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் வரிசையில் ஏழாவதாக வந்த கால்வின் சாவேஜ் மட்டும் கொஞ்சம் அதிரடி காட்டி 23 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இறுதியாக 19.5 ஓவர்களில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க : தினக்கூலில இருந்து பேராசிரியர் வரைக்கும்.. இவங்ககிட்ட இருந்துதான் இதை கத்துகிறேன்-அர்ஸ்தீப் சிங் பேட்டி

வாஷிங்டன் பிரீடம் அணியின் பந்துவீச்சில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் ரச்சின் ரவீந்தரா 3.5 ஓவர்கள் பந்துவீசி வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டு தந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஜஸ்தீப் சிங் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்

- Advertisement -