இந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவர் அர்ஸ்தீப் சிங்.
சமீபத்தில் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வருங்கால இளைஞர்களுக்கு சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் முதன்முறையாக பங்கு பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஸ்தீப் சிங், அங்கிருந்து மெல்ல முன்னேறி இந்திய அணியில் இடம் பிடித்தார். 2022ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பங்கு பெற்று தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய போதிலும் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது.
அதற்குப் பிறகு தனது விடாமுயற்சியினால் மீண்டும் உழைத்து, ஐபிஎல் தொடரில் மீண்டும் தலை சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி 2024 ஆம் ஆண்டு உலக கோப்பையில் திரும்பவும் பங்கு பெற்றார். இந்தத் தொடரில் சிறப்பாக பந்து வீசிய அர்ஸ்தீப் சிங் 7.16 பந்து வீச்சு எக்கானமியில் 17 விக்கெட்டுகள் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 19வது ஓவரில் இவர் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்திய அணி வீரர்கள் தங்களது சொந்த மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், அர்ஸ்தீப் சிங்கும் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அப்போது அவர் இந்திய மக்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் உத்வேகத்தை எதிர்பார்ப்பதாக கூறினார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “ஒரு வீரராக நான் ஒவ்வொருவரிடமிருந்தும் உத்வேகத்தை எதிர்பார்க்கிறேன்.
அது ஒரு தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் நபராக இருந்தாலும் சரி, வகுப்பில் முதலிடம் வகிக்கும் மாணவனாக இருந்தாலும் சரி,பேராசிரியராக இருந்தாலும் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் உத்வேகத்தை எதிர்பார்க்கிறேன். அவர்களின் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படுபவர்களால் உத்வேகம் பெற முயற்சிக்கிறேன். இளைஞர்களுக்கான செய்தி என்னவென்றால், உங்களால் முடிந்தவற்றை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:தோனி யார் தெரியுமா?.. இப்படி செஞ்சது ரொம்ப தப்பு – பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை கண்டித்த ஹர்பஜன் சிங்
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அர்ஸ்தீப் சிங் பங்கேற்க வேண்டும் என்று கருத்துக்கள் நிலவிய போது, ஒரு வீரராக எந்த வடிவ கிரிக்கெட் விளையாடினாலும் உங்களால் முடிந்த 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்று தான் நினைப்போம். நானும் அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் என்னால் முடிந்தவற்றை நான் சிறப்பாக வழங்குவேன் என்று அர்ஸ்தீப் சிங் கூறி இருக்கிறார்.