ஒழுங்கு மீறல் காரணமாக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படவில்லையா? – மவுனம் கலைத்த ராகுல் டிராவிட்!

0
252
Dravid

கிரிக்கெட்டில் கடந்த காலங்களில் வீரர்களின் பணிச் சுமை மற்றும் மனச்சுமை குறித்தான எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்து வந்தது.

மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் கிரிக்கெட் வீரர்களின் இந்தப் பிரச்சனைகள் குறித்தான புரிதல் எதுவும் இருந்ததில்லை. நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் விளையாடுவதில் என்ன பிரச்சனை என்பதாகத்தான் நினைத்தார்கள்.

- Advertisement -

முதன் முதலில் ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ்வெல் தனக்கு மனம் மிகவும் வெறுமையாக இருப்பதாகவும், தொடர்ந்து கிரிக்கெட் அணி உடனே இருந்து இப்படி ஆகிவிட்டதாகவும், அதனால் தனக்கு கால வரையற்ற ஓய்வு தேவை என கேட்டு, ஆஸ்திரேலியா அணியை விட்டு வெளியேறினார்.

இந்த நிகழ்வு கிரிக்கெட் வட்டாரத்தில் வீரர்களின் பணிச்சுமை மற்றும் மனச்சுமை குறித்தான விவாதங்களை துவக்கியது. இதற்கடுத்து இங்கிலாந்து அணியின் தற்போதைய டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் இதே மாதிரியான காரணங்களுக்கு காலவரையற்ற ஓய்வில் சென்றார்.

2022 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக விராட் கோலி ஒரு மாத ஓய்வில் சென்றார். பின்பு திரும்பி வந்து இரண்டரை வருடங்கள் சதம் அடிக்க முடியாமல் இருந்ததற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முற்றுப்புள்ளி வைத்தார். அப்பொழுது கடந்த சில ஆண்டுகளில்தான் மன பாதிப்பில் இருந்ததாக வெளிப்படையாகக் கூறினார்.

- Advertisement -

தற்பொழுது இப்படியான காரணத்திற்காக, மேலும் தொடர்ந்து அணி உடன் பயணித்தாலும்விளையாட வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதாலும், இசான் கிஷான் மனச்சோர்வின் காரணமாக ஓய்வு கேட்டு வாங்கி வெளியேறியிருந்தார். அவருடைய கோரிக்கைக்கு பிசிசிஐ மதிப்பளித்து இருந்தது.

இந்த நிலையில் அவர் துபாயில் பார்ட்டிகளில் கலந்து கொண்டு வருவதாகவும், இதன் காரணமாகவே அவரை ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு தேர்வு செய்யவில்லை என்றும், மேலும் அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் தேர்வு செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

தற்பொழுது இதற்கு பதில் அளித்து பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ” இசான் கிசான் ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக அணியில் தேர்வு செய்யப்படாமல் இல்லை. அவற்றின் ஆப்பிரிக்க தொடரின் போது தனக்கு ஓய்வு கேட்டார். நாங்களும் அதை ஆதரித்தோம். தற்பொழுது அவர் ஓய்வில் இருக்கிறார். தேர்வு செய்யப்படுவதற்கு அவர் இல்லை. மீண்டும் அவர் தேர்வு செய்யப்படுவதற்கு உள்நாட்டு போட்டிகளுக்கு திரும்பி தன்னை தயார்படுத்துவார்.

மேலும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒழுங்கு பிரச்சனையால் தேர்வு செய்யப்படாமல் இல்லை. தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கூட அவர் விளையாடவில்லை. ஏனென்றால் நிறைய பேட்ஸ்மேன்கள் வெளியில் இருக்கிறார்கள். இருவர் தேர்வு செய்யப்படாததுக்கும் உண்மையான காரணம் இதுதான்” என்று கூறியிருக்கிறார்!