டேவிட் வார்னர் தான் டாப்… விராட் கோலி முறியடிப்பாரா?.. அடுத்தடுத்த இடத்தில் தவான், ஏபி டி வில்லியர்ஸ்! – ரெக்கார்ட்!

0
41

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் டேவிட் வார்னர். அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் இருக்கின்றனர்.

2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்து, இந்த ஆண்டு 16-வது சீசன் மிகச் சிறப்பாகவே துவங்கியிருக்கிறது. முன்பு வரை எட்டு அணிகள் மட்டுமே இடம்பெற்று வந்தன.

- Advertisement -

கடந்த 2022 ஐபிஎல் சீசனில் இருந்து கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு, தற்போது பத்து அணிகள் விளையாடுகின்றன. ஐபிஎல்-இல் ஜிம்பாப்வே, அயர்லாந்து, நேபால் ஆகிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் இடம்பெறுவது கூடுதல் சிறப்பாகும்.

ஐபிஎல் வரலாற்றில் எண்ணற்ற பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. முன்னணி பேட்ஸ்மேன்கள் பல சாதனைகளை ஐபிஎல் வரலாற்றில் படைத்திருந்தாலும், 2009 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் டேவிட் வார்னர் படைத்திருக்கும் சில சாதனைகள் முறியடிப்பதற்கு மிகவும் கடினம் என்று பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் முதலாவதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 2016ஆம் ஆண்டு இவர் விளையாடி வந்தபோது, அந்த சீசனில் 16 போட்டிகளில் 848 ரன்கள் அடித்தார். ஐபிஎல்-இல் வெளிநாட்டு வீரர் ஒரு சீசனில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதே சீசனில் விராட் கோலி 973 ரன்கள் விளாசினார். இதுவே தற்போது வரை தனிநபர் ஒரு சீசனில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருக்கிறது.

- Advertisement -

தற்போது 16ஆவது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதின. டெல்லி அணியின் கேப்டனாக இருந்துவரும் டேவிட் வார்னர் அரைசதம் இப்போட்டியில் அடித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் 60-வது அரைசதம் இதுவாகும். வெறும் 163 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். அதிக அரைசதங்கள் அடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியல்

  1. டேவிட் வார்னர் – 60 அரைசதங்கள்
  2. விராட் கோலி – 49 அரைசதங்கள்
  3. ஷிகர் தவான் – 49 அரைசதங்கள்
  4. ஏபி டி வில்லியர்ஸ் – 43 அரைசதங்கள்