ஹைதராபாத்த எப்படி ஜெயிக்கிறது.. சிஎஸ்கேவுக்கு ரூட்டு போட்டுக் கொடுத்த ஆர்சிபி.. மாற்றங்கள் நடக்குமா?

0
296
CSK

நேற்று ஹைதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து ஆர்சிபி அணி வீழ்த்தி அசத்தி இருக்கிறது. இதன் மூலம் பேட்டிங்கில் அசுர பலம் வாய்ந்த ஹைதராபாத் அணியை எப்படி வீழ்த்தலாம் என்பதை மற்ற ஐபிஎல் அணிகளுக்கு ஆர் சி பி அணி காட்டியிருக்கிறது. குறிப்பாக அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட உள்ள சிஎஸ்கே அணிக்கு காட்டி இருக்கிறது.

நேற்று ஐதராபாத் அணிக்கு எதிராக பனிப்பொழிவு பற்றி கவலைப்படாமல், ஆர்சிபி அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக சேஸ் அழுத்தம் இல்லாமல் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் உள்ளே வந்து அடித்து நொறுக்குவது தடுக்கப்பட்டது. நேற்று அவர்களுக்கு ரன் சேஸ் செய்யும் அழுத்தம் உருவாக்கப்பட்டது.

- Advertisement -

அடுத்து ஹைதராபாத் அணியின் அதிரடிக்கு மிக முக்கிய காரணமான துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும், இடது கை ஆட்டக்காரர்கள் என்பதால் ஆர்சிபி கேப்டன் ஆப் ஸ்பின்னர் வில் ஜேக்சை வைத்து ஆரம்பித்தார். இது நல்ல பலனையும் கொடுத்தது. பொதுவாக சுழல் பந்து வீச்சில் அடுத்து வரக்கூடிய மார்க்ரம்முக்கும் பிரச்சனை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு விஷயங்களும் ஹைதராபாத் அணியை பெரிய அளவில் பாதிக்கக் கூடியதாக அமைகிறது. மேலும் அவர்கள் எல்லோரும் ஹிட்டர்கள் என்பதால், இரண்டாவதாக பேட் செய்து ரன்னை துரத்தும் பொழுது, இன்னிங்சை கட்டமைத்து எடுத்துச் செல்லும் பொறுமையும் திறமையும் அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடும் பொழுது, டாஸ் வென்றால் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கும் ஹைதராபாத் துவக்க ஆட்டக்காரர்களை எடுத்ததும் கட்டுப்படுத்தலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி நேற்று மெதுவா விளையாடல.. சரியாக விளையாடினார்.. இந்த காரணங்களை பாருங்க – ஆரோன் பின்ச் ஆதரவு

மேலும் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராக பதிரனாவை மட்டும் வைத்துக்கொண்டு, முஸ்தாஃபிசுர் ரஹமான் இடத்திற்கு ஆஃப் ஸ்பின்னர் மதிஷா தீக்சனாவை கொண்டு வர வேண்டும். எப்படியும் இந்த முறை சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மெதுவாக சுழல் பகுதிக்கு சாதகமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆர்சிபி காட்டிக் கொடுத்திருக்கும் இந்த வழியில் சிஎஸ்கே செல்லுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.