“வார்னரை நல்ல முறையில் அனுப்ப முடியாது.. காரணம் இதுதான்!” – ஷாகின் அப்ரிடி பரபரப்பு பேச்சு!

0
484
Shaheen

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா நாட்டுக்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக நான்கு நாள் பயிற்சி போட்டியில் டிசம்பர் 6ஆம் தேதி கான்பரா மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 பெர்த் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 மெல்போன் மைதானத்திலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 2024 சிட்னி மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த டெஸ்ட் தொடருடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஓய்வு பெற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேவிட் வார்னரை வழி அனுப்பி வைப்பதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. மேலும் யாருக்கும் இல்லாத வகையில் டேவிட் வார்னர் விரும்பிய வரையில் விளையாட விட்டு, சொந்த நாட்டில் அவர் ஓய்வு பெறும் வகையில் அனுமதித்து ஆஸ்திரேலியா ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் குறித்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஷாகின் அப்ரிடி கூறும் பொழுது “விடைபெற இருக்கும் டேவிட் வார்னரை நாங்கள் வாழ்த்துவோம். ஆனால் டேவிட் வார்னரின் கடைசி டெஸ்ட் தொடரில் அவருக்கு நல்ல முடிவை நாங்கள் கொடுக்க மாட்டோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் நாங்கள் தற்போது முன்னணியில் இருப்பதால், இந்த தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியம்.

நாங்கள் அடுத்து கான்பரா மைதானத்தில் ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு சிறந்த சவாலாக இருக்கும். மேலும் நாங்கள் பரத்தில் முதல் போட்டி விளையாடுவதற்கு இது உதவியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!