“வக்கார் யூனுஸ் வாசிம் அக்ரம் ஏத்துக்கிட்டா சரி.. ஜடேஜா பந்தை பாத்து முடிவு பண்ணேன்!” – ஆட்டநாயகன் பும்ரா அதிரடியான பேச்சு!

0
2598
Bumrah

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய போட்டியில் பாகிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

முதலில் டாஸ் தோற்று பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணி, 155 ரன்கள் இரண்டு விக்கெட் என்று நல்ல நிலையில் இருந்து, அதற்கு மேல் 36 ரன்கள் மட்டும் எடுத்து, 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சில் தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லுக்கு வந்த பும்ரா ஒரு ஆப் கட்டரை வீசி முகமது ரிஸ்வானை கிளீன் போல்ட் செய்தார். இதற்குப் பிறகு ஒரு அவுட் ஸ்விங்கர் மாதிரி ஒன்றை வீசி, சதாப் கானை க்ளீன் போல்ட் செய்தார்.

பும்ராவின் இந்த அதிரடியான பந்து வீச்சு காரணமாக 200 ரன்களை கடப்பதே பாகிஸ்தான் அணிக்கு கடினமாகி போனது. அவர் மொத்தம் ஏழு ஓவர்கள் மட்டும் வீசி 19 ரன்கள் மட்டும் தந்து இரண்டு விக்கெட்டுகளை அற்புதமான முறையில் கைப்பற்றி அசத்தினார்.

இன்றைய ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சாதகமான ஆடுகளம் என்கின்ற காரணத்தினால் அதிரடியாக 86 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவை விட்டு, இரண்டு விக்கெட் மட்டும் எடுத்த பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா பேசும் பொழுது “இது நன்றாக இருந்தது. நீங்கள் விக்கெட்டை சீக்கிரம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். விக்கெட் மெதுவாக இருப்பது எங்களுக்கு தெரியும். எனவே ஹார்ட் லென்த்தில் பந்து வீசுவது அவசியம். இதன் வழி நாங்கள் பேட்ஸ்மேன்களுக்கு ரன் எடுப்பதை கடினமாக்க நினைத்தோம்.

இங்கு விழிப்புணர்வு மட்டுமே உதவி செய்யும். நான் இளமையாக இருந்த பொழுது நிறைய கேள்விகள் கேட்பேன். அது எனக்கு நிறைய அறிவை வளர்க்க உதவியது. நான் விக்கெட்டை ரீட் செய்ய விரும்புகிறேன்.

ஜடேஜாவின் பந்து திரும்புவதை பார்த்தேன். எனவே என்னுடைய மெதுவான பந்தை ஸ்பின்னரின் பந்தாக நான் நினைக்கிறேன். இதன் காரணமாகத்தான் அப்படி ஒரு பந்தை ரிஸ்வானுக்கு வீசினேன். அது நன்றாக வேலை செய்தது.

மேலும் ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங் இருந்தது. நான் சதாப் கானுக்கு ஒரு அவுட் ஸ்விங்கரை வீச நினைத்தேன். ஆனால் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. வக்கார் யூனுஸ் மற்றும் வாசிம் அக்ரம் இருவரும் சில மேஜிக் பந்துகளை வீசுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே இது குறித்து அவர்களது ஒப்புதலை பெறுவதுதான் சிறந்தது!” என்று கூறியிருக்கிறார்!