இஷான் கிஷன் வேண்டாம்.. கடைசி 15 டி20 போட்டிகளில் சொதப்பல்.. டேட்டாவுடன் வந்த வாசிம் ஜாஃபர்

0
56

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கு பின் இந்திய அணி டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. வெறும் 149 ரன்களை மட்டுமே சேர்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜேசன் ஹோல்டரின் அபாரமான பந்துவீச்சால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 1-0 என்று டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடியதே காரணமாக பார்க்கப்படுகிறது. சீரான இடைவேளையில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கொடுத்தனர். அதேபோல் சஞ்சு சாம்சனை 6வது இடத்தில் களமிறங்கியது பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

இதுமட்டுமல்லாமல் தொடக்க வீரர்கள் சுப்மன் கில் – இஷான் கிஷன் இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் புதிய பந்தில் ரன்களை சேர்க்க வேண்டும் என்று விக்கெட் கொடுக்காலும் பரவாயில்லை என்று ரிஸ்க் எடுத்தனர். ஆனால் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டை காப்பாற்ற நினைத்து ஆட்டமிழந்தனர்.

இப்படி இந்திய அணி தோல்விகளுக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று இரவு தொடங்கவுள்ளது. அதில் தொடக்க வீரர்களில் மாற்ற செய்ய வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாபர் பேசும் போது, நான் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். குறிப்பாக இஷான் கிஷன் இடத்தில் ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும். இஷான் கிஷனின் டி20 பேட்டிங் ஃபார்ம் வருத்தமளிக்கிறது. கடந்த 15 இன்னிங்ஸ்களில் ஒருமுறை கூட 40 ரன்களை சேர்க்கவில்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருந்துள்ளார்.

- Advertisement -

அதேபோல் ஐபிஎல் சீசனிலும் பெரியளவில் இஷான் கிஷனால் பேட்டிங்கில் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி 625 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க கூடாது. அவர் பேட்டிங்கில் உறுதியை பார்க்கப்படுகிறது. நிச்சயம் இந்த மாற்றத்தை காண விரும்புகிறேன்.

கடைசி 15 டி20 போட்டிகளில் இஷான் கிஷன் வெறும் 206 ரன்களையே எடுத்துள்ளார். முதல் டி20 போட்டி வேறு ஆடுகளத்தில் விளையாடியதால், சுப்மன் கில் – இஷான் கிஷனிடம் அதிக எதிர்பார்ப்பை வைத்துக் கொள்ளவில்லை. இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் உதவியாக இருந்தால், ரன்கள் சேர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.