மீண்டும் மாற்றப்பட்ட ஐபிஎல் 2024 அட்டவணை.. இரண்டு முக்கிய போட்டிக்கான தேதிகள் மாற்றம்.. முழு தகவல்கள்

0
949
IPL2024

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனுக்கு பிசிசிஐ முதன்முதலில் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டது. இந்தியாவில் பொது தேர்தல் நடக்கும் ஆண்டு என்கிற காரணத்தினால், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தேவைகளால், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை வெளியிட்ட பிறகு, அதற்கேற்றவாறு இரண்டாவது கட்ட ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிட பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ இரண்டாவது கட்ட ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டது. இதில் மே 19ஆம் தேதி உடன் லீக் போட்டிகள் முடிவடைந்து, மே 26 ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் 17வது ஐ பி எல் சீசன் முடிவுக்கு வரும் என்று அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

மேலும் இந்த முறை தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிவதால், ப்ளே ஆப் சுற்றில் ஒரு போட்டி மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு முக்கிய போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய போட்டிகள் அனைத்தும் குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில பாதுகாப்பு காரணங்களால் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் குறிப்பிட்ட இரண்டு போட்டிகளுக்கான தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. இப்படியான மாற்றம் இத்தோடு முடியுமா? இல்லை தேர்தல் காலத்தை பொறுத்து அடிக்கடி இப்படி நடக்குமா? என்று தெரியவில்லை.

இந்த மாற்றத்தில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி விளையாடுவதாக இருந்த போட்டி, ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கு நிறைய நெருக்கடி இருந்தது.. கம்பீர் சதம் அடிக்கனும்னு நினைச்சேன் – மீண்டும் வைரல் ஆகும் தோனியின் பேட்டி

இதேபோல் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் ஏப்ரல் 16ஆம் தேதி மோதிக் கொள்ள இருந்த போட்டி ஏப்ரல் 17ஆம் தேதிக்கு ஒருநாள் தள்ளி மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த அட்டவணை மாற்றத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டு இருக்கிறது.