அயர்லாந்துக்கு எதிரான டி20ஐ தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிக்கு பதிலாக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம் – காரணம் இதுதான்

0
1301
VVS Laxman and Rahul Dravid

நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடர் முடிந்து, ஜூன் மாதம் 9ஆம் தேதி, ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில், உள்நாட்டில் தென்ஆப்ரிக்க அணியுடன் மோத இருக்கிறது இந்திய அணி. இதற்கடுத்து இரண்டு இருபது ஓவர் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணியுடன் அயர்லாந்தில் விளையாடுகிறது.

தற்போது அயர்லாந்து அணியுடனான இந்தத் தொடருக்கு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் லஷ்மணனை நியமித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராய் வருதவதற்கு முன், பெங்களூருவில் அமைந்துள்ள நேசனல் கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பதவி வகித்தார். தற்போது இந்தப் பதவியில் லஷ்மணனே இருக்கிறார்.

- Advertisement -

2021ஆம் ஆண்டு நான்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, கொரோனாவின் காரணமாக நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியது. மீதியுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் பின்பு விளையாடுவதாய் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு உறுதி அளித்திருந்தது.

தற்போது இதன்படி இந்திய அணி இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, ஒரு அணி அயர்லாந்துடன் இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் மோதுகிறது. இன்னொரு அணி இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் மற்றும் ஐந்து இருபது போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாட இருக்கிறது.

அயர்லாந்து உடனான போட்டி ஜூன் மாதம் 26ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இங்கிலாந்துடனான இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டிக்கான, நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஜூன் 24-27 தேதியில் துவங்கி முடிகிறது. இதனால் இங்கிலாந்துடன் டெஸ்ட் விளையாடும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராகவும், அயலாந்துடன் இருபது ஓவர் கிரிக்கெட் விளையாடும் இந்திய அணிக்கு லஷ்மணன் தலைமைப் பயிற்சியாளராகவும் இருப்பார் என்று தெரிய வந்துள்ளது!

- Advertisement -