ஆசிய கோப்பை இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் – பிசிசிஐ அதிரடி

0
69

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் டிராவிட் இல்லாமலையே இந்திய அணி துபாய்க்கு நேற்று புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் டிராவிட் பதிலாக ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருந்த விவிஎஸ் லக்ஷ்மன் ஆசியக் கோப்பை தொடருக்கும் தற்காலிக பயிற்சியாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து ஜிம்பாப்வேவிலில் இருந்து லக்ஷ்மன் நேரடியாக துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளார். பயிற்சியாளர் டிராவிட் கொரோனாவில் இருந்து குணமடைந்து நெகட்டிவ் என முடிவு வந்த பிறகு அவர் இந்திய அணியுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டிராவில் இல்லாத நிலையில் விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணிக்கு பயிற்சியாளராக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டி20 போட்டி மற்றும் ஜிம்பாவே தொடரில் செயல்பட்டு இருக்கிறார்.

வரும் 28ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதும் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் பயிற்சியாளர் இல்லாமல் இந்திய அணி விளையாடுவது பின்னடைவாக கருதப்பட்டது என்பதால் பிசிசிஐ இந்த முடிவை அறிவித்துள்ளது. இந்த நிலையில் துபாய்க்கு சென்றுள்ள இந்திய அணி தனது முதல் பயிற்சி முகாமை தொடங்கியது. இதில் ரோகித் சர்மா,ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி ஒரு நாள் தாமதமாக தான் புறப்பட்டு இன்று துபாய் சென்று அடைந்தார். எனினும் அவர் ஓய்வு ஏதும் எடுக்காமல் இன்றைய பயிற்சி முகாமில் பங்கேற்றார். அப்போது அங்கு வந்த பாபர் அசாம் மற்றும் ரஷித் கான் ஆகியோரை கோலி கைகொடுத்து வாழ்த்து கூறினார். இதனை தொடர்ந்துநாளை பாகிஸ்தான் எதிரான போட்டியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சியாளர் லட்சுமனும் மற்றும் ரோகித் சர்மா இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர்.இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து முடிவு எடுக்கப்படும். பிறகு எந்த மாதிரியான யுக்திகளை பயன்படுத்தி பாகிஸ்தானை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை எடுக்கப்படும்.

- Advertisement -

அதன் பிறகு வீரர்களுக்கு தனி தனி பொறுப்புகள் வழங்கப்பட்டு அதற்கான பயிற்சியை அனைவரும் தொடங்குவார்கள். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள இந்திய அணியின் வீரர்கள் சமீப காலமாக தினறுகிறார்கள்.இதனால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து லக்ஷ்மன் சிறப்பு பயிற்சி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.