தோனியை பத்தி நான் பேச விரும்பல.. இந்த ஒருத்தர் பேசறதுதான் சரியா இருக்கும் – சேவாக் பேட்டி

0
4361
Dhoni

நேற்று ஹிமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும் மகேந்திர சிங் தோனி பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் வந்தது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இது குறித்து சேவாக் தனது விமர்சனத்தை கூறி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரகானே வெளியேறி துவக்கம் ஓரளவுக்கு நன்றாக கிடைத்த போதிலும் கூட, இதற்கு அடுத்து மிடில் ஓவர்களில் வரிசையாக முக்கிய விக்கெட்டுகளை இழந்து பெரிய நெருக்கடியில் அந்த அணி சிக்கியது.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் இம்பேக்ட் பிளேயர் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை உள்ளே கொண்டு வர விரும்பவில்லை. எனவே விக்கெட்டுகள் வரிசையாக சரிந்த பொழுது தோனி உள்ளே வரவேண்டிய தேவை உருவானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்துல் தாக்கூரை முன்னே அனுப்பினார்கள்.

மேலும் பேட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் வந்த தோனி முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். தோனியின் இந்த முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. எனவே சமூக வலைதளங்களில் தோனி ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் வரிசையில் வந்தது பற்றி விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கிறது.

இதுகுறித்து வீரேந்திர சேவாக் இடம் கேட்ட பொழுது “அவரது பேட்டிங் ஸ்லாட் பற்றி நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். ஆனால் அவர் மாறப்போவது கிடையாது. இதைப்பற்றி விவாதிப்பதில் அர்த்தம் கிடையாது. அவர் பேட்டிங் மேல் வரிசையில் வர வேண்டும் என்பது நம் அனைவரது விருப்பம். ஆனால் ஏன் அவர் மேல் வரிசையில் வருவதில்லை என்று புரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : நடராஜனுக்கு இந்த முக்கிய குவாலிட்டி இருக்கு.. இந்திய டீம்ல இருக்கனும் – ஹைதராபாத் கோச் பேட்டி

நான் அவருடன் எதுவும் பேசவில்லை, அவருடைய முழங்கால் காயம் பற்றி வரும் வதந்திகள் குறித்து எதுவும் தெரியாது. மேலும் அது குறித்து பேசவும் நான் விரும்பவில்லை. தோனி ஏன் மேல் வரிசையில் வந்து பேட்டிங் செய்யவில்லை என வெளிப்படுத்த முடிந்த ஒரே நபராக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மட்டுமே இருக்கிறார். அவர்தான் வந்து சொல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.