ஜெய்ஸ்வால் என்னை மாதிரி ஆகவே முடியாது.. அவருக்கும் அது தெரியும் – சேவாக் பேட்டி

0
178
Sehwag

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முதல் ஏழு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. இதன் காரணமாக அவரை டி20 உலக கோப்பையில் தேர்வு செய்வது குறித்து நிறைய பேச்சுவார்த்தைகள் சென்றது. தற்போது ஜெய்ஷ்வால் குறித்து வீரேந்திர சேவாக் பேசியிருக்கிறார்.

ஜெய்ஸ்வால் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் ஏழு போட்டிகளில் சரியாக விளையாடாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய எட்டாவது போட்டியில் அதிரடியாக சதம் அடித்து, தன்னை டி20 உலகக்கோப்பை இந்திய அணி தேர்வில் இருந்து விலக்கி வைக்க முடியாது என தேர்வுக்குழுவுக்கு சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

இதன் காரணமாகவிராட் கோலி துவக்க வீரராக களமிறங்குவதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக கில், ருதுராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.

இந்த நிலையில் வீரேந்திர சேவாக் ஜெய்ஸ்வால் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு ஏற்கனவே விமானம் புக் செய்யப்பட்டு விட்டதாக கூறியிருக்கிறார். அவர் நிச்சயம் இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்றும், அதே சமயத்தில் அவரை தன்னுடன் ஒப்பிடக் கூடாது எனவும் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசியிருக்கும் வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “நான் ஆரம்பத்தில் என்னை சச்சின் உடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் நீங்கள் இப்படியான ஒப்பீட்டில் இருந்து எவ்வளவு சீக்கிரம் விலகி விடுகிறீர்களோ அவ்வளவு நல்லது. என்னுடன் வைத்து ஒப்பிடப்படுவதை ஜெய்ஸ்வால் பெரிதாக நினைக்க மாட்டார் என்று நினைக்கிறேன். என்னால் நிச்சயம் சச்சின் ஆக முடியாது. சேவாக் சேவாக் போலத்தான் ஆட முடியும். மேலும் ஒப்பீடு உங்களை காயப்படுத்தும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு ஆள் மட்டும் போதும்.. இர்பான் பதான் தேர்ந்தெடுத்த வித்தியாசமான டி20 உ.கோ இந்திய அணி

எனக்கு ஒப்பிடுகளில் நம்பிக்கை இல்லை. நான் என்னுடைய பேட்டிங் ஸ்டேன்ஸ் மற்றும் விளையாடும் முறையில் சில மாற்றங்கள் செய்தேன். இதற்குப் பிறகு சச்சின் போல் நான் விளையாடுவதாக சொல்வது இல்லை. அதை அவர்கள் நிறுத்தி விடுவார்கள். ஒப்பிடுகள் எப்பொழுதும் அழுத்தத்தை கொண்டு வருகிறது. மேலும் சிறிய நகரங்களில் இருந்து வரும் பொழுது வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.