தோனியின் ஓய்வு முடிவு.. கொதித்து எழுந்த சேவாக்.. காட்டமான விமர்சனம்

0
63683

இந்திய கிரிக்கெட் அணியில் தோனியும் சேவாக்கும் விளையாடும் போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அப்போது பல்வேறு செய்திகள் வெளிவந்தது. சீனியர்களை அணியை விட்டு தூக்க வேண்டும் என தோனி நினைத்ததாகவும், அதற்கு சேவாக் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தொடர்ந்து  பேசப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். தோனி குறித்து பலமுறை ஷேவாக் நல்லவிதமான கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் போட வந்த தோனியிடம் கிரிக்கெட் வர்ணனையாளர் டேனி மாரிசன், தங்களுடைய கடைசி ஆண்டை எப்படி அனுபவிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த தோனி இது என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர் என்று நீங்கள் தான் முடிவு எடுத்து விட்டீர்கள். நான் ஏதும் சொல்லவில்லை என கூறி சிரித்தார். இதற்கு சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு வீரர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் எனக்கு சுத்தமாக புரியவில்லை. ஏன் தோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டே வருகிறது. இது அவர் கடைசி ஆண்டா? இல்லையா? என்பது குறித்து ஒரு வீரரிடம் ஏன் கேட்கிறீர்கள். தோனி ஓய்வு பெற வேண்டுமா இல்லையா என்பது குறித்து அவரே முடிவு செய்து கொள்வார்.

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் இதுதான் அவருடைய கடைசி சீசன் என்று அவர் வாயால சொல்ல வைக்க வேண்டும் என இந்த கேள்வியை கேட்கிறார்கள்.ஆனால் இது குறித்து தோனி தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் இனி விளையாடுவாரா மாட்டாரா என்பது தோனிக்கு மட்டுமே தெரியும் என்று ஷேவாக் கூறினார்.

- Advertisement -

தோனிக்கு தற்போது 41 வயது ஆகிறது. ஏற்கனவே மூட்டு வலி பிரச்சனை காரணமாக அவர் பேட்டிங் செய்ய முன்வரிசையில் வருவதில்லை. இதனால் அடுத்த ஆண்டு வரை தோனி காத்திருந்தால் அவருக்கு 42 வயது ஆகிவிடும். அதன் பிறகு விளையாட முடியுமா என்பது தெரியாது. இதனால் தோனிக்கு இது தான் கடைசி சீசனாக இருக்கும் என அனைவரும் நினைக்கத் தொடங்கிய நிலையில் தோனி இவ்வாறு கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.