என் தம்பி விராட் கோலியை விமர்சனம் செய்யும் முன்.. உங்க வரலாறை பாருங்க.. சஞ்சய் மஞ்ச்ரேக்கரை விமர்சித்த கோலியின் சகோதரர்

0
61

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் தற்போது முதலாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி இதுவரை அந்த அணிக்காக 6 அரை சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கரின் பதிவுக்கு விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி தனது விமர்சனத்தை பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் பெயர் இல்லை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறது. இன்னும் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இந்த நிலையில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விராட் கோலி அமைந்து வருகிறார். இதுவரை அந்த அணி விளையாடிய போட்டிகளில் 6 அரை சதங்கள் அடித்து வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறார்.

இருப்பினும் அவரது ஸ்ட்ரைக் ரேட் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கான இலக்கை விராட் கோலி சேஸ் செய்யும் போது 47 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். அதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 108.51 ஆக அமைந்துள்ளது. மேலும் இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகளிலும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது பெரிய அளவில் இல்லை. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே விமர்சனம் செய்திருக்கும் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தற்போது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டி இருக்கிறார்.

- Advertisement -

எளிதாக பேசி விட முடியும்

அதாவது இந்த ஐபிஎல் தொடரில் பெரிய ஸ்டிரைக் ரேட் உடன் விளையாடிய வீரர்கள் என தனது பட்டியலை வெளியிட்டு இருந்தார். அதில் நிக்கோலஸ் பூரான், பிரியான்ஸ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர் சூரியகுமார் யாதவ், ஜாஸ் பட்லர், மிச்சல் மார்ஸ், ட்ராவிஸ் ஹெட் என பல்வேறு வீரர்கள் இடம் பெற்று இருக்கும் நிலையில் அதில் விராட் கோலியின் பெயர் இடம் பெறவில்லை. இது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரது சகோதரரான விகாஸ் கோலி தனது சகோதரரான விராட் கோலியின் பெயரை பதிவிடாத நிலையில் அவரை விமர்சனம் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ராஞ்சிக்கு எப்படி தோனியோ.. இனி பீகாருக்கு எங்க வைபவ் இருப்பார்.. ஒரே ஆட்டத்தில் தோனியுடன் ஒப்பிடும் பீகார் முன்னாள் கேப்டன்

அதில் அவர் ” திரு சஞ்சய் மஞ்சுரேக்கரின் ஒரு நாள் ஸ்ட்ரைக் ரேட் 64.31 ஆக இருக்கும் நிலையில் அவரால் 200+ ஸ்டிரைக் ரேட் குறித்து எளிதாக பேசி விட முடிகிறது” என்று கூறியிருந்தார். அதாவது மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் அவரால் இத்தகைய விமர்சனங்களை எளிதாக பேசி விட முடிகிறது என்று காட்டமாக பேசியிருக்கிறார். மேலும் விராட் கோலியின் ரசிகர்கள் விராட் கோலி சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடி அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள் எனவும் தங்களது பதிலடிகளை பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -