ராஞ்சிக்கு எப்படி தோனியோ.. இனி பீகாருக்கு எங்க வைபவ் இருப்பார்.. ஒரே ஆட்டத்தில் தோனியுடன் ஒப்பிடும் பீகார் முன்னாள் கேப்டன்

0
46

நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயது இளம் துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி அபாரமாக விளையாடி சரம் அடித்தார்.

இந்த சூழ்நிலையில் பீகார் அணியின் முன்னாள் கேப்டன் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரரை எம்எஸ் தோனியோடு ஒப்பிட்டு சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பீகாரர்க்கு இனி வைபவ்தான்

ராஜஸ்தான் அணியில் 14 வயது இளம் துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி கடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். தனது அறிமுகப் போட்டியின் முதல் பந்தில் சிக்சர் அடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அவர், அந்த போட்டியில் ஓரளவு நன்றாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார். அதற்குப் பிறகு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினாலும், நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிராக தனது ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்தினார்.

குஜராத்த அணி நிர்ணயித்த 209 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் 14 வயது இளம் துவக்க வீரர் வைபவ் அபாரமாக விளையாடி 35 பந்துகளில் சதம் அடித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். ஒரு இளம் வயதில் எந்தவித பயமும் இல்லாமல் சதம் அடித்திருப்பது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் பீகார் அணியின் முன்னாள் கேப்டன் அசுத்தோஸ் அமன் வைபவ் பீகார் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

எங்கள் டிஎன்ஏவில் கிடையாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நேற்று வைபவ் அடித்த சிக்ஸர்களை பார்த்தபோது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். ஜார்க்கண்டுக்கு எம்எஸ் தோனி தற்போது எப்படி இருக்கிறாரோ அதே போல பீகாரருக்கு வைபவ் நிச்சயமாக இருப்பார். வைபவ் பீஹாரை கிரிக்கெட் அரங்கில் நிலை நிறுத்தியுள்ளார். சமஷ்திபூர் பற்றி இப்போது மக்களுக்கு தெரியும். பீகாரின் டிஎன்ஏவில் உள்ள ஒரு விஷயம் என்றால் நாங்கள் எதற்கும் பயப்படவில்லை.

இதையும் படிங்க:CSK vs PBKS.. தோனியின் மாஸ் உத்தேச ப்ளேயிங் XI.. பஞ்சாபுக்கு பதிலடி தர 2 மாற்றம் போதும்.. முழு தகவல்கள்

எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்றால் நிச்சயமாக பயமும் இருக்காது. தனது ஐபிஎல் வாழ்க்கையை சர்துல் தாக்கூரின் பந்தில் சிக்ஸர் அடித்து ஆரம்பித்து பின்னர் ரஷித் கானின் பந்துவீச்சில் சிக்சர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்து இருக்கிறார். ரஞ்சி டிராபியில் அவர் விளையாடிய போது அந்த நான்கு நாட்கள் மிகவும் பதட்டமாக இருந்தேன். அவர் வலைகளில் சிறப்பாக விளையாடியதை பார்த்து விளையாட வேண்டும் என்று விரும்பினேன். ஒருவேளை காயம் ஏற்பட்டால் அவர் எப்படி சமாளிப்பார்? அழுத்தத்தை எப்படி சமாளிப்பார்? என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் அவர் 19 ரன்கள் குவித்த பிறகு பீகாரருக்கு ஒரு புதிய சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டார் என்று அலட்சியமாக சொன்னேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -