விராட் கோலி எப்போதும் என் மனதில் இருந்தார் ; வெற்றி கேப்டன் ரோஹித் சர்மா பரபரப்பு பேச்சு!

0
8717
Rohitsharma

இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மிகவும் பரபரப்பான ஒரு போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் நடந்து முடிந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் டாசை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா சீக்கிரத்தில் வெளியேற கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி அரை சதங்கள் அடித்தார்கள். சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அதிரடியான துவக்கம் தந்தார். பங்களாதேஷ அணி ஏழு ஓவர்களுக்கு 66 ரன்களுக்கு விக்கெட் இழப்பு ஏதுமின்றி இருந்த நிலையில் மழை வந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பிறகு துவங்கப்பட்ட ஆட்டத்தில் 16 ஓவர்களுக்கு 151 ரன்களை பங்களாதேஷ் அணி அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்க, பங்களாதேஷ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் கடுமையாகச் சண்டை செய்த பங்களாதேஷ் அணியினர் இறுதியில் வெறும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்கள்.

இந்தப் போட்டியில் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ” நான் இந்த ஆட்டத்தில் அமைதியாகவும் அதே நேரத்தில் பதட்டமாகவும் இருந்தேன். ஆனால் ஒரு குழுவை ஒருங்கிணைத்து வழிநடத்த அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம். இரண்டாவது ஆட்டம் துவங்கிய பொழுது பதட்டத்தை விட்டு நாங்கள் செயல்பட இறுதி முடிவு எங்களுக்கு நல்ல விதமாக அமைந்தது. இது எங்களுக்கு ஒரு நல்ல வெற்றி” என்றவர்…

- Advertisement -

மேலும் தொடர்ந்து “அர்ஸ்தீப் எங்கள் அணிக்குள் வந்ததும் நாங்கள் அவரிடம் பும்ரா கடைசி ஓவர்களில் செய்து வந்த வேலையைச் செய்ய கேட்டுக் கொண்டோம். யாராவது ஒருவர் அதை எடுத்துக் கொண்டு செய்வது கடினமாக இருந்தது. ஒரு இளைஞன் வந்து இந்த மாதிரியான ஒரு வேலையை எடுத்துக் கொண்டு செய்வது சாதாரணமானது இல்லை. நாங்கள் அவரை தயார்படுத்தி உள்ளோம். அவர் எட்டு ஒன்பது மாதங்கள் இதற்காக தயாராகி இருக்கிறார். இதைச் செய்து வந்த ஒருவரை நான் தொடர்ந்து ஆதரிக்க வேண்டி இருந்தது. சமி மற்றும் அர்ஸ்தீப் இடையே யாரைத் தேர்வு செய்வது என்கின்ற வித்தியாசம் இருந்தது ” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா ” என் மனதில் எப்போதும் விராட் கோலி இருந்தார். அவருக்கு சில குறிப்பிட்ட சில ஆட்டம் தேவைப்பட்டு இருந்தது. குறிப்பாக அவர் ஆசிய கோப்பைக்குப் பின்பு திரும்பி பார்க்கவே இல்லை. கேஎல் ராகுலுக்கு அனுபவம் இருக்கிறது. அவர் பேட்டிங் செய்யும் விதம் அவருக்கும் அணிக்கும் மிகவும் முக்கியமானது. அவர் எந்த வகையான வீரர் அவர் எதில் திறமையானவர் என்று எங்களுக்குத் தெரியும். இன்று நாங்கள் எடுத்த சில கேட்சுகள் அருமையாக இருந்தது. நீங்கள் ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடி கேட்ச்களை எடுப்பது அவ்வளவு எளிதானது கிடையாது. இதைத் தாண்டி சிறப்பாக செயல்பட்டது எங்கள் அணி வீரர்களின் தன்மையைக் காட்டுகிறது. எங்களது பீல்டிங் திறமையில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது ” என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

- Advertisement -