பாபர் அசாமை கீழே இறக்கி மீண்டும் விராட் கோலி முதலிடம்.. கடைசி 10 இன்னிங்ஸில் பெரிய சுவாரசியம்!

0
1791
Virat

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்த சில ஆட்டங்களிலேயே மிகவும் பரபரப்பாக மாற ஆரம்பித்திருக்கிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து ஆச்சரியம் அளித்தது.

மேற்கொண்டு இந்திய ஆஸ்திரேலிய அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி மிகவும் விறுவிறுப்பான ஒன்றாக அமைய, அந்த போட்டியின் முடிவு இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை நோக்கி பெருவாரியான மக்களைத் திருப்பி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இலங்கை அணி இந்த உலகக் கோப்பை தொடருக்கு தங்களின் பிரதான மூன்று வீரர்களை தவறவிட்டு சந்திக்கிறது.

இந்த நிலையில் இன்று டாஸ் வென்று தைரியமாக பேட்டிங் என அறிவித்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் மற்றும் சதீரா இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள்.

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான பாபர் அசாம் 10 ரன்களில் மதுசங்கா பந்துவீச்சில் ஆட்டம் இழந்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் இதே ஏமாற்றம் தொடர்ந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அவரது பேட்டிங் ஆவரேஜ் சரிந்து விராட் கோலிக்கும் கீழ் வந்திருக்கிறது. குறைந்தபட்சம் 5,000 ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களின் சிறந்த சராசரியில் விராட் கோலி 57.50 என முதல் இடத்தில்இருக்கிறார். பாபர் அசாம் 57.09 என இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறார். மைக்கேல் பெவன் 53.58, ஏபி டிவில்லியர்ஸ் 53.50 என அடுத்த இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.

பாபர் அசாம் கடைசி பத்து ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக நான்கு இன்னிங்ஸ்களில் 64 சராசரியில் 264 ரன்கள் குவித்திருக்கிறார். அதேவேளையில் மற்ற பெரிய அணிகளுக்கு எதிராக ஆறு இன்னிங்ஸ்களில் 12 ஆவரேஜில் 72 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!