இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சச்சின் மற்றும் சங்கரா இருவரின் மெகா சாதனைகளை தாண்டி புதிய இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறார்.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இருந்தார். இதன் காரணமாக இன்று ரன் எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினார்.
ரோகித் சர்மா விராட் கோலி அற்புதம்
இந்த நிலையில் ரன் அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்கிய விராட் கோலி ஒரு முனையில் ரோகித் சர்மாவுக்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு தந்து விளையாடி அரை சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அதிரடியாக அரை சதத்தை கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். இருவரும் சேர்ந்து நூறு ரன்னுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றியை மிக எளிதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
விராட் கோலி சாதனை
இந்த போட்டியில் சதம் அடித்ததின் மூலமாக விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரன் துரத்தலின் போது அதிக முறை ஐம்பது ரன்னுக்கும் மேலாக எடுத்ததில் சச்சின் சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்கராவை தாண்டி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
ஒரு நாள் போட்டி ரன் துரத்தலின் போது அதிக முறை 50+ ஸ்கோர்:
70 – விராட் கோலி (161)*
69 – சச்சின் டெண்டுல்கர் (232)
55 – ரோஹித் சர்மா (153)*
50- ஜாக் காலிஸ் (158)
46- கிறிஸ் கெய்ல் (152)
44 – சவுரவ் கங்குலி (148)
இதையும் படிங்க : ஹர்ஷித் ராணா அசத்தல் மாற்றம்.. இன்று கலக்கல் பவுலிங்.. ஆஸி வழியில் கம்பீர் எதிர்கால திட்டம்.. முழு அலசல்
ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள்:
18426 – சச்சின் டெண்டுல்கர்
14235 – விராட் கோலி
14234 – குமார் சங்கக்கார






