இன்று ஆஸ்திரேலியாக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித்ராணா மிகவும் சிறப்பாகப் ப்ந்து வீசி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்திருக்கிறது.
ஹர்ஷித் ராணாவின் மாற்றம்
இன்று ஹர்ஷித் ராணாவுக்கு பவர் பிளேவில் நான்கு ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த நான்கு ஓவர்களிலும் 6 முதல் 8 மீட்டர்களில் தொடர்ந்து பந்துவீசினார். மேலும் ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களுக்கு ஷார்ட் பந்து எதையும் வீசவில்லை. இதனால் அவரது முதல் நான்கு ஓவர் சிறப்பாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது ஸ்பெல்க்கு வந்து அதேபோல அருமையாக வீசினார். அலக்ஸ் கேரி, கூப்பர் காணொலி, மிட்சல் ஓவன், ஜோஷ் ஹேசில்வுட் என அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலியா அணி 236 ரன்னில் சுருள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
கம்பீரின் மாஸ்டர் பிளான்
தற்போது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் இடம் பெறவில்லை. இதே போல ஆஸ்திரேலிய அணியிலும் கேமரூன் கிரீன் இடம் பெறவில்லை. ஆனால் பேட்டிங் கீழ் வரிசையில் மிட்சல் ஸ்டார்க் நாதன் எல்லீஸ் போன்ற ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர்களை வைத்து ஆஸ்திரேலியா சமாளித்தது.
இதையும் படிங்க : எனக்கும் கேப்டன்சி பண்ண தெரியும்.. ரோகித்தை வைத்தே நிரூபித்த கில்.. தரமான சம்பவம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த நிலையில் கீழ் வரிசையில் ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடிய அளவில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு தொடர்ந்து தேவைப்படுகிறார். இந்த மாதிரி ஒருவர் கிடைத்தால் மூன்று வடிவங்களிலும் குல்தீப் மாதிரியான ஸ்பின்னரைத் தொடர்ந்து விளையாட வைக்க முடியும். எனவேதான் ஹர்ஷித் ராணாவை தொடர்ந்து கம்பீர் வாய்ப்பு கொடுத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.






