வீடியோ- 6 வினாடியில்  ஓடிய விராட் கோலி.. உசைன் போல்டையே மிஞ்சிய ஓட்டம்

0
290

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி பேட்டிங்கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் பில்டிங் செய்யும் போது அவர் செய்த ஒரு காரியம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

விராட் கோலி எப்போதுமே தனது உடல் தகுதியை டாப் கிளாஸ் ஆக வைத்திருப்பார். அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் கூட விராட் கோலி 100 ரன்கள் அடிக்கும் வரை வெறும் ஐந்து பவுண்டரிகளை மட்டுமே அடித்தார். உடல் நலம் குன்றி காய்ச்சல் இருந்த போதும் விராட் கோலி ஓடியே ரன்களை சேர்த்தார்.

நேற்று மும்பையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் போது விராட் கோலி செய்த பில்டிங் ரசிகர்களை மிரள வைத்தது. மதிய நேரத்தில் வெயில் பொளந்து கட்டியது. இதில் ஆஸ்திரேலியா வீரர்கள் பேட்டிங் செய்ய முடியாமல் கடுமையாக தடுமாறினர். ஆனால் கடும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

குறிப்பாக முகமது சமி, சிராஜ் போன்றோர் தங்களது முழு வேகத்தில் பந்து வீசி அசத்தினர். இதில் நேற்று 11 வது ஓவரில் மிட்செல் மார்ஷ் பவுண்டரி அடிக்கிறார் என்பதற்காக லெஃப்ட் சைடு இல் எல்லைக்கோட்டில் பில்டர்களை ஹர்திக் பாண்டியா நிற்க வைத்தார். இதனால் மிட்செல்  பந்தை லெக்ஸைடு திருப்பி விட்டு ரன்கள் ஓட நினைத்தார்.

- Advertisement -

அப்போது வலது புறம் ஷார்ட் கவரில் நின்ற விராட் கோலி பந்தை எடுப்பதற்காக பிட்ச்சை கடந்து மிட் விக்கெட் பகுதிக்கு ஓடினார். பவுண்டரியில் இருந்து ஃபீல்டர் வந்து எடுப்பதற்குள் விராட் கோலி அந்த பந்தை எடுத்து விட்டார். விராட் கோலி இதனை வெறும் 6 நொடிகளில் செய்து விட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

நேற்று இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் இந்திய வீரர்களின் அட்டகாசமான பில்டிங் தான். சுப்மன் கில் ஸ்லீப்பில் இரண்டு அபாரமான கேட்ச்களை பிடித்தார். இதே போன்று ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அசத்தல் கேட்ச் தான் ஆஸ்திரேலியாவை 188 ரன்களில் சுருட்ட முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் இன்று அங்கு செல்கின்றனர்.