கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

உலக சாதனை படைத்த விராட் கோலி.. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 52வது சதம்.. தடுமாறும் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52 வது சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே பார்மெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார்.

- Advertisement -

சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதம் அடித்திருந்த நிலையில் விராட் கோலி தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் 52 சதம் அடித்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

கோலி 52வது சதம்:

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 18 ரன்களிலும் ரோகித் சர்மா 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார்.

ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி சிக்ஸர்கள் என அடிக்க ஆரம்பிக்க ஸ்கோர் வேகமாக சென்றது. விராட் கோலியை ஆட்டம் இழக்க வைக்க தென்னாப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடினர். ஆனால் அது எதுவுமே பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி 102 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்.

- Advertisement -

சச்சின் சாதனை முறியடிப்பு:

இதன் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்கள் தாண்டி இருக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். உலக அளவில் அடிக்கப்பட்டு இருக்கும் இந்த சதம் 7000 சதமாகும்.

இதையும் படிங்க: நண்பா சதம் அடிக்கலாம் அதை செய்.. விராட் சொன்னதை மறுத்து ரோகித் செய்த தியாகம் – களத்தில் என்ன நடந்தது?

இதேபோன்று சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 ரன்கள் மேல் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். சச்சின் 58 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த நிலையில் விராட் கோலி அதனை தற்போது முறியடித்துள்ளார். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது 227 முறை அடித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சச்சின் 264 முறை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts