இந்திய கிரிக்கெட்

இத்தனை வருஷம் கிரிக்கெட் ஆடினாலும் ஒரே ஒரு ரன் சோதிக்குது.. ரோகித் கூட 2013 சம்பவம் ஞாபகத்துக்கு வருது – விராட் கோலி பேச்சு

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தான் எத்தனை வருடங்கள் கிரிக்கெட் விளையாடி இருந்த போதிலும் இன்னும் சோதனைகள் தீரவில்லை என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா உடன் இணைந்து 169 பந்தில் 168 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மேலும் காணும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 81 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.

முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட்

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து மூன்றாவது போட்டியில் இன்று முதல் ரன்னை எடுத்ததும் விராட் கோலி அதை மகிழ்ச்சியுடன் நகைச்சுவையாக கொண்டாடியது நெகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது.

இதுகுறித்து பேசி உள்ள விராட் கோலி கூறும் பொழுது ” நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடி வந்தாலும் கூட உங்களுக்கு கிரிக்கெட் புதிய பாடங்களை கற்பித்துக் கொண்டே இருக்கிறது. நான் இன்னும் சில நாட்களில் 37 வயதை தொடப் போகிறேன். ஆனாலும் சவால் மிக்க போட்டிகளில் நான் என்னுடைய திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். வெற்றிக்கான ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ரோகித் சர்மாவுடன் இணைந்து அமைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”

- Advertisement -

2013 சம்பவம்

“ரோகித் சர்மா மற்றும் என்னுடைய ஆரம்பத்தில் இருந்து நல்ல புரிதல் இருந்தது. அதுவே எங்களை சிறப்பான முறையில் விளையாடும் ஒரு ஜோடியாக மாற்றி இருக்கிறது. அதே சமயத்தில் இளம் வயதில் நாங்கள் நிலைத்து நின்று விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தால் போட்டியை வெல்ல முடியும் என்று உறுதியாக நம்பினோம். தற்போது அணியில் நாங்கள் தான் அனுபவம் உள்ள கூட்டணியாக இருக்கிறோம்”

இதையும் படிங்க : 169 பந்து 168 ரன்.. வேடிக்கை காட்டிய விராட் ரோகித் கூட்டணி.. இந்தியாவின் தொடரும் சாதனை வரலாறு.. அபார வெற்றி

“நானும் ரோகித் சர்மாவும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து வெல்வது 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆரம்பித்தது. நாங்கள் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தால் அது அணியின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆஸ்திரேலியாவுக்கு வருவது மகிழ்ச்சியான விஷயம். பெரிய அளவில் ரசிகர்கள் வந்து பார்த்ததற்கு நன்றி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by