இன்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் காரணமாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.
ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் 2 மாற்றமாக அர்ஸ்தீப் சிங் இடத்திற்கு பிரசித் கிருஷ்ணா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இடத்திற்கு குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றார்கள்.
ஹர்ஷித் ராணா அபாரம்
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மார்ஸ் 50 பந்துகளில் 41 ரன், ரென்ஷா 58 பந்துகளில் 56 ரன்கள், மேத்யூ ஷார்ட் 41 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
இதற்கு மிக முக்கியமாக ஹர்ஷித் ராணா பந்துவீச்சு அமைந்தது. அவர் 8.4 ஓவர்கள் பந்து வீசி 39 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இதற்கு அடுத்து வாஷிங்டன் சுந்தர் 10 ஓவர்களில் 44 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
ரோகித் சர்மா விராட் கோலி அபாரம்
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் கில் 26 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடித்து 125 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 121* ரன்கள், விராட் கோலி அரை சதம் அடித்து 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் உடன் 74* ரன்கள் எடுக்க, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 38.3 பந்துகளில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : 71 இன்னிங்ஸ் குறைவு.. சேசிங்கில் சச்சின் சங்கக்கராவை தாண்டி விராட் கோலி மெகா சாதனை.. விமர்சனங்களுக்கு பதிலடி
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் இதுவரை மோதியதில் ஒரு முறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வைட் வாஷ் ஆனதில்லை என்கின்ற வரலாறு மீண்டும் தொடர்கிறது. அதே சமயத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி தந்திருக்கிறார்கள். இருவரும் 169 பந்தில் ஆட்டம் இழக்காமல் 168 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்கள்.






