இந்திய கிரிக்கெட்

சஞ்சுவுக்கு அநீதி நடந்ததுக்காக பார்த்தேன்.. ஆனா 15 வயசு பொடியன் இருக்க வரை அது மாறாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

​ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 மேட்ச்சில் சஞ்சு சாம்சன் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அவுட் ஆனதால், அவர் மீது பிரஷர் அதிகமாகி இருப்பதாக இந்திய முன்னாள் பிளேயர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

​இந்த மேட்ச்சில் இண்டியா டீம் சேஸிங் செய்தபோது சஞ்சு சாம்சன் பத்து ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் ஆகி வெளியேறினார். அதேநேரம் நல்ல பார்மில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி வெளியே உட்கார்ந்து இருப்பதால், சஞ்சு சாம்சன் மீது பிரஷர் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​அடுத்து வரும் மேட்ச்களில் சஞ்சு சாம்சன் சிறப்பான பெர்பார்மன்ஸ் செய்யவில்லை என்றால் பிளேயிங் லெவனில் அவரது இடம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு உள்ளது.

​இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “நான் சஞ்சு சாம்சன் மீதுதான் கவனம் செலுத்தினேன். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் மீண்டும் அவுட் ஆகிவிட்டார். வைபவ் சூர்யவன்ஷி வெளியே உட்கார்ந்து இருக்கிறார். சஞ்சு சாம்சன் தொடர்ந்து மேட்ச்சில் ஆடும் வரை இந்த பிரஷர் இருந்து கொண்டேதான் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “ஜிம்பாப்வே சீரிஸில் சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷியை வெளியில் உட்கார வைத்ததே பெரிய கேள்விதான். நான் சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் செய்தாலும், வைபவ் வெளியில் இருக்கும் வரை சஞ்சு சாம்சன் மீதான பிரஷர் கூடிக்கொண்டே இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts