தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 மேட்ச்சில் அபிஷேக் சர்மா காட்டிய அதிரடி பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் பாராட்டி பேசி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த போட்டிகளில் இந்திய அணியின் இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா ஃபார்ம் இல்லாமல் தொடர்ச்சியாக குறைந்த ரன்களில் அவுட் ஆகி வந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தார்.
இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் மேட்ச்சில் அபாரமாக ஆடிய அவர் 32 பால்களில் 82 ரன்கள் குவித்து டீம் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “சமீபத்திய ஃபார்ம் அடிப்படையில் பார்த்தால் அபிஷேக் சர்மா இந்த மேட்ச்சில் விளையாடி இருக்கக் கூடாது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த் “ஆனால் அவர் ஆப்கானிஸ்தான் பௌலிங்கை அற்புதமாக எதிர்கொண்டு ரன்கள் குவித்து விட்டார், பழைய 6 இன்னிங்ஸ்களை மறந்துவிட்டு அனைவரும் இந்த 82 ரன்களை மட்டுமே நினைவில் கொள்வார்கள்” என்று கூறி இருக்கிறார்.