மீடியா முன்னாடி வரக்கூடாதுனு இருந்தேனா?.. 2 மாசம் இல்லதான் – மவுனம் கலைத்த விராட் கோலி

0
642
Virat

விராட் கோலியின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முறை கூட முழு டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் தவறவிட்டதே கிடையாது. ஆனால் முதல் முறையாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே உள்நாட்டில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவர் தவறவிட்டார்.

மனைவி அனுஷ்கா சர்மா அவர்களுக்கு குழந்தை பிறக்க இருந்த காரணத்தினால், குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழ்நிலையின் பொருட்டு விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. அதற்குப் பிறகு அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் விராட் கோலி கிடைக்கவில்லை. எனவே அவர் மொத்தமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை.

- Advertisement -

பரவிய செய்தியும் நெருக்கடியும்

மேலும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில், வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விராட் கோலியை தேர்வு செய்ய தேர்வுக்குழு விரும்பவில்லை என்பது போன்ற செய்திகள் மிக வேகமாக பரவி வந்தன.யார் பரப்பியது என்றே தெரியாமல், இந்தியாவில் இருந்து மட்டும் இல்லாமல் வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் இது குறித்து நிறைய கருத்துக்களை கூறி வந்தார்கள்

இதன் காரணமாக நடக்க இருக்கும் ஐபிஎல் தொடர் விராட் கோலிக்கு மிக முக்கியமான ஒன்றாக திடீரென மாறிப்போனது. இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி பெரிய அளவில் ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஒருவேளை அவர் இந்த ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாவிட்டால் இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறாமலும் போகலாம் என்பது குறித்து ரசிகர்களை ஏற்கனவே தயார் படுத்தி விட்டார்கள்.

இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடர் பயிற்சி முகாமை ஆர்சிபி சீக்கிரத்தில் ஆரம்பித்து விட்ட போதும், விராட் கோலி வந்து இணையானது நிறைய யூகங்களை கிளப்பி விட்டிருந்தது. இது எல்லாம் சேர்ந்து விராட் கோலி விஷயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, அவருடைய ரசிகர்களுக்கு மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய கவலையை ஒன்று செய்திருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 ஐபிஎல் சீசன்.. இந்த 2 பசங்க கிரிக்கெட் வாழ்க்கையில பெரிய மாற்றத்தை செய்யும் – கவாஸ்கர் கணிப்பு

இந்த நிலையில் ஆர்சிபி பயிற்சி முகாமில் இணைந்த விராட் கோலி கூறும் பொழுது “திரும்பி வருவது மிகவும் நன்றாக இருக்கிறது. முதலில் கொஞ்சம் கிரிக்கெட் விளையாடி ஐபிஎல் தொடரை தொடங்குகிறேன். ஐபிஎல் சீசன் தொடக்கத்திற்காக பெங்களூருக்கு ஒவ்வொரு முறை வருவதும் உற்சாகமான ஒன்றாக இருக்கிறது. அதனால் இது எப்பொழுதும் ஒரே மாதிரியான உணர்வை தருகிறது. நான் மீடியா ரேடாரில் இருந்து தள்ளி இருக்க நினைக்கவில்லை. இரண்டு மாதங்களாக நீங்கள் இல்லைதானே என்று கூறலாம். ஆனால் நான் திரும்பி வந்து இருப்பதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். மேலும் ரசிகர்களும் என்னைப் போலவே இருப்பார்கள்” என நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.