2024 ஐபிஎல் சீசன்.. இந்த 2 பசங்க கிரிக்கெட் வாழ்க்கையில பெரிய மாற்றத்தை செய்யும் – கவாஸ்கர் கணிப்பு

0
148
Gavaskar

இந்தியர்களுக்கு மார்ச் முதல் மே இறுதிவரை ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் திருவிழாவாக மாறி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமங்களில் பெரிய உச்சிகளை தொட்டு இருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடரின் வெற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தை உலக கிரிக்கெட்டில் ஆதிக்க சக்தியாக மாற்றி இருக்கிறது.

ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் மிகவும் சுவாரசியமான விஷயமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அமைந்திருப்பது எதுவென்றால், எந்த இளம் வீர இந்திய அணிக்கு விளையாடக்கூடிய அளவுக்கு திறமை படைத்தவராக இருக்கிறார்? என்று தெரிந்து கொள்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு வருடத்திலும் இப்படியான இளம் வீரர்கள் ஐபிஎல் தொடர் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்கிறார்கள். அதிலிருந்து சில வீரர்கள் இந்திய அணிக்கும் செல்கிறார்கள்.

- Advertisement -

உதாரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் மற்றும் இந்தியாவின் அதிவேகப் பந்துவீச்சாளரான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் உம்ரான் மாலிக் ஆகியோர் கிடைத்தார்கள்.

இதற்கு அடுத்து அப்படியே திரும்பினால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு மூன்று வடிவத்திலும் துவக்கட்டக்காரராக விளையாடக்கூடிய தகுதி படைத்த இடதுகை பேட்ஸ்மேன் இளம் வீரர் ஜெய்ஷ்வால் கிடைத்திருக்கிறார். அதேபோல் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு புதிய ஃபினிஷர் ஆக கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து ரிங்கு சிங் கிடைத்திருக்கிறார்.

இரண்டு இளம் வீரர்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்

தற்பொழுது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து அப்படியான எந்த வீரர்கள் வெளிப்படுவார்கள்? எந்த இளம் வீரருக்கு இந்த ஐபிஎல் தொடர் அவருடையதாக இருக்கும்? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிறைய வண்ணமயமான கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடர் எந்த இளம் வீரர்களுக்கு பிரேக் அவுட் தொடராக அமையும் என்று கூறியுள்ள சுனில் கவாஸ்கர் “துருவ் ஜுரல் நிச்சயமாக அப்படியான வீரராக இருக்க முடியும். இந்த ஆண்டு இந்திய அணிக்காக அவர் பேட்டிங் செய்த விதம், மற்றும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் பேட்டிங் செய்த விதம், அவருக்கு நிச்சயமாக பெரிய நன்மைகளை உருவாக்கும். குறிப்பாக அவர் பேட்டிங் ஆர்டரில் முன்னே வருவார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே ஆர்சிபி போட்டி டிக்கெட் விற்பனை சர்ச்சை.. மன்னிப்பு கேட்ட பேடிஎம்.. நடந்தது என்ன.?

இன்னொரு வீரர் யார் என்றால் அவர் ஆகாஷ் தீப். அவருக்கு கடந்த வருட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்திய அணியில் பெரிய போட்டியில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ஒருவேளை அவருக்கு இதன் காரணமாக ஆர்சிபி அணியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கலாம். அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம்” என்று கூறியிருக்கிறார்.