கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியை விராட் கோலி தலைமை தாங்கி மிக சிறப்பாக வழி நடத்தி வந்தார். அவரது தலைமையில் இந்திய அணி இதுவரை மொத்தமாக அறுபத்தி எட்டு போட்டிகளில் 40 போட்டியில் வெற்றி கண்டுள்ளது. அதில் 16 வெற்றிகள் அயல் மண்ணில் கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 7-வது இடத்தில் சிக்கி தள்ளாடியது.
விராட் கோலி பொறுப்பேற்ற பின்னர் அவரது தலைமையிலான இந்திய அணி ஆண்டு ஆண்டுகளாக நம்பர் ஒன் அணியாக வலம் வந்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறுத்துவிட முடியாது. சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 15ஆம் தேதி விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தான் இனி கேப்டனாக தொடரப் போவதில்லை என்று அதிர்ச்சி அளித்தார்.
எனது பேட்டிங்கில் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்
அந்த அறிவிப்பில், எனக்கு இத்தனை ஆண்டுகள் உறுதுணையாக இருந்த பிசிசிஐ நிர்வாகத்திற்கு நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை இவ்வளவு ஆண்டுகளாக பிசிசிஐ எனக்கு தந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். என்னுடன் இணைந்து விளையாடிய சக வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களால் இந்த ஏழு வருட டெஸ்ட் பயணம் மிகவும் மகிழ்ச்சியாகவும் மறக்க முடியாத வகையிலும் இருந்தது.
ரவி சாஸ்திரி மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றிகள். உங்களுடைய தொடர் உழைப்பு இந்திய அனியை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இறுதியாக எம்எஸ் தோனிக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த கேப்டன் பதவியை கொடுத்ததற்கு அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியை தலைமை தாங்கி என்னால் முடிந்த வரை 120 சதவீத உழைப்பை இந்திய அணிக்கு நான் கொடுத்திருக்கிறேன். கேப்டன் பதவியில் இருந்து விலகி வேலைப் பளுவை குறைத்து இனி என்னுடைய பேட்டிங்கில் நான் முழு கவனத்தை செலுத்த விரும்புகிறேன். இந்திய அணிக்காக இன்னும் கடுமையாக உழைத்து என்னால் முடிந்தவரை அதிக ரன்களை குவித்து, அணியை வெற்றி பெற வைப்பதிலேயே தன்னுடைய முழு கவனம் இனி இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
பிசிசிஐ கொடுத்த அற்புதமான சலுகை
வருகிற பிப்ரவரி 25ம் தேதி இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. அந்தப் போட்டியில் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.
பிசிசிஐ தரப்பில் விராட் கோலிக்கு ஒரு சலுகை கொடுக்கப்பட்டது. கேப்டனாக அவருடைய கடைசி டெஸ்ட் போட்டியை பிப்ரவரி 25ஆம் தேதி பெங்களூரு வைத்து விளையாடி கொள்ளும்படி அந்த சலுகையை அவருக்கு பிசிசிஐ கொடுத்தது. டெல்லியை சேர்ந்த விராட் கோலிக்கு இரண்டாவது தாயகமாக பார்க்கப்படுவது பெங்களூரு தான். ஐபிஎல் தொடரில் ஆண்டுகளாக அங்கே அவர் அந்த ஊர் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு மறக்க முடியா தருணங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.
ஆனால் பிசிசிஐ கொடுத்த இந்த சலுகைக்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு போட்டியில் அவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்றும், அப்படிப்பட்ட சலுகையை எதிர்பார்த்து விளையாடுபவன் தான் இல்லை என்றும் கூறி அந்த சலுகையை விராட் கோலி அதிரடியாக மறுத்துள்ளார்.
விராட் கோலி இவ்வளவு பெரிய தொகையை மறுத்தது அவருடைய பிறந்த நிலையை எடுத்துக் காட்டினாலும் அவரது ரசிகர்கள் குறிப்பாக பெங்களூரில் ரசிகர்களுக்கு இது சற்று கவலையை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.