இந்திய கிரிக்கெட்

கிரிக்கெட்டில் அந்த ஒரு விஷயம் மனதை உடைத்து விட்டது.. ஜீரணிக்கவே முடியாமல் இருந்தேன் – விராட் கோலி பேட்டி

​கடந்த 2019 மற்றும் 2023 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி சந்தித்த அதிர்ச்சி தோல்விகள் குறித்து இந்திய நட்சத்திர பேட்டர் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

- Advertisement -

​2019-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்வி தமக்கு மிகப்பெரிய மன உளைச்சலையும் வேதனையையும் தந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2023 உலகக்கோப்பை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்த அவர், 2027 உலகக்கோப்பையே தமது கடைசி தொடர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

​இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இதுகுறித்து பேசும்போது “2015 அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடும்போதே நமது பலம் மற்றும் பலவீனம் பற்றி தெளிவாக தெரிந்திருந்தது, ஆனால் 2019 போட்டி எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 240 ரன்கள் இலக்கு இருந்தபோது மழை குறுக்கிட்டது, அன்றைய தினமே ஆடியிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால் அடுத்த நாள் புதிய பந்து வீச்சில் அவர்கள் சூழ்நிலையை சாதகமாக்கி எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர். அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது, நான் மிகவும் மனமுடைந்து போனேன். அதன்பின் சில மாதங்களுக்கு மனரீதியாக முற்றிலும் உடைந்துபோய் இருந்தேன்” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் தொடர்ந்து பேசிய அவர் “2023 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அணியின் சூழல் சிறப்பாக இருந்தது, அனைவரும் ஒருவருக்கொருவர் பாசிட்டிவ் ஆக செயல்பட்டனர். இறுதிப்போட்டியில் நான் 54 ரன்களில் அவுட் ஆனபோது 140 முதல் 150 ரன்கள் வரை எடுத்தால் வெல்லலாம் என நினைத்தேன், ஆனால் அவுட் ஆனதும் அதை செரிமானம் செய்ய பல நாட்கள் ஆனது. கிரிக்கெட் ஆடும் வரை அடுத்த கட்ட சவால்கள் இருக்கும், இந்திய அணிக்காக நான் விளையாடப்போகும் கடைசி உலகக்கோப்பை இதுதான், அதுவே எனக்கு மிகப்பெரிய மோட்டிவேஷன்” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts