இந்திய கிரிக்கெட்

எனக்கு இந்த பையனை நினைச்சா ஆச்சரியமா இருக்கு.. அவன் தன்னோட திறமைக்கு இதுவரை விளையாடல – பார்த்திவ் படேல் பேச்சு

​தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடருக்கு நடுவே, இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் குறித்து முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தைப் பெற்றுள்ளன.

- Advertisement -

​டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிக முக்கிய மேட்ச் வின்னராகத் திகழும் ரிஷப் பண்ட், ஒயிட் பால் கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்குச் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். சர்வதேச டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் அவரது திறமைக்கேற்ற பெர்ஃபார்மன்ஸ் இன்னும் முழுமையாக வரவில்லை என்பது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக உள்ளது.

​எவ்வாறாயினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் கீப்பிங் திறமை மற்றும் போட்டியை மாற்றும் ஆக்ரோஷமான பேட்டிங் முறை இந்திய அணிக்குப் பெரும் பலமாகவே இருந்து வருகிறது. லிமிடெட் ஓவர்ஸ் போட்டிகளில் விராட் கோலி அல்லது சுப்மன் கில் போலச் சிங்கிள்கள் எடுத்து ஆட்டத்தின் டெம்போவை சீராகக் கொண்டு செல்லும் கலையைக் கற்றுக்கொண்டால் அவரால் அனைத்து ஃபார்மட்களிலும் முத்திரை பதிக்க முடியும்.

​ரிஷப் பண்ட் குறித்து பார்த்திவ் பட்டேல் பேசும்போது “பண்ட்டின் ஒயிட் பால் எண்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒருநாள், டி20 அல்லது ஐபிஎல் போட்டிகளில் அவரால் தனது திறமைக்கேற்ப பெர்ஃபார்ம் செய்ய முடியவில்லை. அதை ஒரு புதிராகவே நான் காண்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அதைச் சரிசெய்ய விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா அல்லது கேப்டன் கோலியைப் போலவே பண்ட்டும் மிகவும் முக்கியமானது. அவர் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அவர் விளையாடும் விதத்தால் எப்போதும் விமர்சனங்கள் இருக்கும். ஆனால் வெற்றி விகிதம் மிக அதிகம். இதனால்தான் அவர் எக்ஸ் ஃபேக்டராக இருக்கிறார். அவரை பொறுப்பாக விளையாடுமாறு சொல்ல முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய பார்த்திவ் பட்டேல் “பண்ட்டை விமர்சிப்பவர்கள் குறித்துப் பேசும்போது, அவரது விக்கெட் கீப்பிங் திறமை போதுமான அளவு பாராட்டப்படுவதில்லை என்று நினைக்கிறேன். விருத்திமான் சாஹாவைப் போலத் தொழில்நுட்ப ரீதியாகத் தோன்றாவிட்டாலும், அவர் மிகக் குறைவான கேட்சுகளையே தவறவிடுகிறார். கடினமான பிட்ச்களிலும் அந்த நிலைத்தன்மை அவரிடம் உள்ளது. அவர் அவுட் ஆகும்போது விமர்சித்தால், அவர் முன்னால் வந்து சிக்ஸர்களைப் பறக்கவிடும்போது அவரைப் பாராட்ட உங்களுக்கு உரிமையில்லை. ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக அவர் நிச்சயமாக இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஆவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts