இந்திய கிரிக்கெட்

புவனேஸ்வர் குமார் விஷயத்தில் இன்னொன்றும் நடக்க போகுது.. நிச்சயம் அவர் அதுக்கு தகுதியானவர் – உமேஷ் யாதவ் பேட்டி

​2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் இடம்பெற வேண்டும் என்று 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளில் நடக்கவிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை அமைப்பதில் அணி நிர்வாகத்திற்கு பல சவால்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. பவுன்ஸர் மற்றும் ஸ்விங் பந்துகளுக்குச் சாதகமான தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​2027 உலகக்கோப்பைக்கான வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்வது குறித்து உமேஷ் யாதவ் தனது கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்துள்ளார். அனுபவமும் திறமையும் கொண்ட பவுலர்கள் அணியில் இருப்பது முக்கிய கட்டங்களில் போட்டியை இந்திய அணியின் பக்கம் திருப்ப மிகவும் உதவியாக இருக்கும்.

​புவனேஸ்வர் குமார் பற்றி உமேஷ் யாதவ் பேசும்போது “அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்க வேண்டும். அவர் விளையாடிய அனைத்து சீசன்களிலும் மிகச் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்துள்ளார். தென்னாப்பிரிக்கா விக்கெட்டுகளில் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகிய இரண்டும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதனால் அவர் ஒரு சிறந்த ஆப்ஷனாக இருப்பார் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தொடர்ந்து பேசிய உமேஷ் யாதவ் “புவனேஸ்வர் குமாருக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரீத் பும்ராவும் உலகக்கோப்பை ரேஸில் இருக்கிறார். எனவே அவருக்கும் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts