கிரிக்கெட் உலகில் எப்போதுமே இரண்டு அணி வீரர்களுக்கு களத்திலும் சரி களத்தில் வெளியேவும் சரி, மோதல் தெரிந்து கொண்டே இருக்கும். இது காலம் காலமாக நடந்து கொண்டு வருகிறது.
ஹர்பஜன் சைமன்ட்ஸ், சையத் அன்வர்- வெங்கடேஷ் பிரசாத், கம்பீர் அப்ரிடி என இந்த பட்டியல் நீடித்துக் கொண்டே இருக்கும்.
தற்போது இந்த லிஸ்டில் இணைந்திருப்பவர்கள் விராட் கோலியும், ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கும் தான். விராட் கோலி தம்மை அவமரியாதை செய்து விட்டதாக நவீன் உல் ஹக் மோதலில் ஈடுபட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லக்னோ, குஜராத் அணிகள் மோதிய ஆட்டத்தில் லக்னோ வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் விராட் கோலி குஜராத்துக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மும்பை , ஆர்சிபி அணி மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆர்சிபி அணியில் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். மேலும் ஆர் சி பி அணி படுதோல்வி தழுவியது. இதனை கலாய்க்கும் விதமாக நவீன் உல் ஹக் மாம்பழம் பழத்தை சாப்பிட்டு ருசிப்பது போல் ஆர்சிபி அணி தோல்வி தழுவுவதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை பெற்றது. விராட் கோலி ரசிகர் பலரும் இதனால் கடுப்பாகி நவீன் உல் ஹ்க்கை சரமாரியாக திட்டினார்கள். எனினும் இது விராட் கோலி தொடங்கிய வைத்தது தான் என்று நவீன் உல் ஹக்கிற்கும் பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக விராட் கோலி தற்போது ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் , இருக்கும் போட்டிகள் எல்லாமே நமது தலைக்குள் தான் இருக்கிறது. எப்போதுமே நமக்கும் நமக்கும் மட்டும் தான் போட்டி என்று பதிவிட்டுள்ளார்.
The competition is all in your head. In reality it’s always you vs you. pic.twitter.com/59OYBZ4WSF
— Virat Kohli (@imVkohli) May 10, 2023
இதன் மூலம் நவீன் உல் ஹக்கிற்கு மறைமுகமாக பதில் கொடுக்கும் வகையில் விராட் கோலி பதிவிட்டு இருக்கிறார். தனக்கு யாரும் போட்டி இல்லை என்றும் எனக்கு நானே போட்டி என்ற கருத்தை பறைசாற்றும் வகையில் விராட் கோலியின் இந்த பதிவு அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த சண்டை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.