மைதானத்தில் ஜோ ரூட் போன்று தனது பேட்டை செங்குத்தாக நிறுத்த முயற்சித்து குறும்பு செய்த விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
211

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரு அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. அதனையொட்டி கவுண்டி தொடரில் விளையாடி வரும் லெய்செஸ்ட்டர்ஷிர் அணியுடன் தற்போது இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி கொண்டிருக்கிறது.

முதலில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணி தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி தற்பொழுது 32* ரன்கள் எடுத்த நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறார். கேப்டன் ரோஹித் ஷர்மா 25 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜோ ரூட் போல பேட்டை செங்குத்தாக நிறுத்த முயற்சித்த விராட்கோலி

ஜோ ரூட் அப்போது மைதானத்தில் தன்னுடைய பேட்டை செங்குத்தாக நிறுத்தி தன்னுடைய வித்தையை அனைவரும் முன்னிலையில் வெளிப்படுத்துவார். எதிர் முனையில் நின்று கொண்டிருக்கும் பொழுது பந்து வீச்சாளர் பந்து வீச வரும் நேரத்தில் பேட்டை செங்குத்தாக நிறுத்தி வித்தை காண்பிப்பார்.

இன்று அவரைப் போல விராட் கோலி தன்னுடைய பேட்டை செங்குத்தாக நிறுத்த முயற்சித்து கடைசியில் அது முடியாமல் போனது. ஜோ ரூட் போன்ற விராட் கோலி தன்னுடைய பேட்டை செங்குத்தாக நிறுத்த முயற்சித்த வீடியோ தற்போது சமூக வலைகளில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

60 பந்துகளில் 4 ஃபோர் மற்றும் ஒரு சிக்சர் என 32* ரன்களை எடுத்து அதிரடியாக தற்பொழுது விராட் கோலி விளையாடிக் கொண்டிருக்கிறார். பயிற்சி ஆட்டத்தில் அவர் சதம் அடித்து மீண்டும் பழைய ஃபார்முக்கு விராட் கோலி திரும்ப வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.