கிங் கோலி படைக்கப் போகும் 3 பிரம்மாண்ட சாதனை.. டான் பிராட்மேன், டிராவிட் என பெரிய தலைகள் ரெக்கார்ட்டுக்கு முடிவுரை

0
1041

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இந்திய அணி  ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் சாதனைகளை படைக்கப்படுவதை காபி,டீ போல் குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கும் கோலி,  இந்த ஆட்டத்தில்  3 முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

விராட் கோலி பேட்டிங்கில் ஜொலித்தால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். அந்த வகையில் இன்று தொடங்கும்  இறுதி சுற்று ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தால், அதன் மூலம் 29  சர்வதேச டெஸ்ட் சதங்களை பதிவு செய்து கிரிக்கெட்டின் டான் பிராட்மன் சாதனையை சமன் செய்ய கோலிக்கு வாய்ப்புள்ளது.

- Advertisement -

தற்போது ஓய்வு பெறாமல் கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ஸ்மித் 30 சதங்களுடனும், ஜோ ரூட் 29 சதங்களுடனும் அடித்து இருக்கிறார்கள்.  இதேபோன்று ராகுல் டிராவிட்டின் சாதனை ஒன்றுக்கும் கோலி வேட்டு வைக்க உள்ளார்.

  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 24 ஆட்டங்களில் விளையாடி 1979 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த நிலையில்  விராட் கோலி மேலும்188 ரன்கள் அடித்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டிராவிட்டை கோலி பின்னுக்கு தள்ளுவார்.

2166 ரன்களுடன் 3வது இடத்தில் டிராவிட், 2434 ரன்கள் உடன் லக்ஷ்மன் 2வது இடத்திலும், 3630 ரன்கள் உடன் முதலிடத்தில் சச்சின் டென்டுல்கரும் உள்ளனர். இதேபோன்று கோலி இந்த டெஸ்டில் 170 ரன்கள் அடித்தால் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில்  சேவாக்கை முந்துவார். இதன் மூலம் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

பத்து ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருக்கிறது தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல இந்தியாவுக்கு இப்ப வந்து இரண்டாவது முறையாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது இதனால் ஈரான் கோழி தன்னுடைய படுத்தி அணியின் வெற்றி குத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.