“ஷமர் ஜோசப் கதையை கேட்டு கண்ணீர் வந்துருச்சு” – ஏபி டிவில்லியர்ஸ் வருத்தம்

0
6474

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பல தோல்விகளுக்குப் பிறகு கிடைத்த வெற்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சமர் ஜோசப் புதிய சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களும் ஆஸ்திரேலியா அணி 289 ரன்களும் குவித்தது.

- Advertisement -

பின்னர் இரண்டாவது இன்னிசைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெரும் நிலையில் இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சமர் ஜோசப் தனது துல்லியமான பந்துவீச்சினால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை சுக்கு நூறாக உடைத்தார்.

ஸ்டீவன் ஸ்மித் ஒரு முனையில் களத்தில் நின்ற போராடினாலும், மறுமுனையில் பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று ஆட விடாமல் ஏழு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டிஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோசப் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

ஆனால் சமர் ஜோசப் கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்பு அவரின் தொடக்க வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. கரீபியன் தீவுகளில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் ஒன்றான பராகாவில் பிறந்த இந்த 22 வயதான வேகப்பந்துவீச்சாளர் 2023 வரை தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கவில்லை. கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு முன்பு சமர் கடந்த ஆண்டு வரை பாதுகாப்பு காவலராக பணியாற்றியுள்ளார். கிரிக்கெட் விளையாடுவதற்கு அடிப்படை நம்புவதும், நிறைய தியாகங்கள் செய்வதும்தான்.

- Advertisement -

நான் இங்கே வந்ததற்கான காரணத்தை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு அதற்காகக் கடுமையாக உழைப்பேன். மேலும் மூத்த வீரர்களின் ஆலோசனை எனக்கு உதவியாக இருக்கிறது என்று சமர் தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் சமரின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான உத்வேகப் பயணத்தைப் படித்த போது தனது கண்களில் கண்ணீர் வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்
“கபாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு சமரின் பங்களிப்பு முக்கியமானது. அவரின் வாழ்க்கை வரலாறை விக்கிபீடியாவில் படியுங்கள். அவரது வாழ்க்கை பயணத்தைப் பற்றி படிக்கும் போது என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரைப் பற்றி குறைந்தபட்சம் சொல்வதற்கே உத்வேகம் தருகிறது” என்று கூறி இருக்கிறார்.