“ஐபிஎல் இங்கிலாந்து வீரர்களுக்கு உதவ போகுது” – இந்திய டெஸ்ட் தொடருக்கு முன் ஸ்டீவன் ஃபின் பேட்டி

0
65

இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னர் பயிற்சி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

பென்ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது வலுவாகக் காணப்படுகிறது. அவர்களின் பேஸ் பால் முறை இந்திய வியூகங்களுக்குத் தகுந்தவாறு சரியாக செயல்படுத்தப்படும் நோக்கில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்புள்ளது. கடைசியாக 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

- Advertisement -

இந்திய ஆடுகளங்கள் பொதுவாக சுழற் பந்துவீச்சு சாதகமாகவே பெரும்பாலும் இருக்கும். இதனால் தற்போது உள்ள இங்கிலாந்து அணியில் நான்கு அறிமுக சுழற் பந்துவீச்சாளர்கள் அறிமுகமாக உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த அறிமுக சுழற் பந்துவீச்சாளர்களிடம் விளையாடியதில்லை என்பதால் சற்று நெருக்கடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். அப்போது டெல்லி அணியில் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன்,  தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கீரன் பொல்லார்ட் ஆகியோருக்கும் கூட நாட்டை தாண்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிக அளவில் அன்பு வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே தற்போதைய டெஸ்ட் தொடரில் விளையாடும் பென்ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜானி பெர்ஸ்டோவ், மார்க் வுட் என இந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்ற வீரர்கள் அணியில் இருப்பதால் அவை அணியின் வெற்றிக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீபன் பின் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில்
“இந்திய அணியில் டெஸ்ட் தொடரை வெல்ல முதலில் பார்வையாளர்களின் இதயங்களைக் கவர வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஆதரவில் இன்னமும் உத்வேகமாகச் செயல்பட முடியும். சில வீரர்களின் ஐபிஎல் புகழ் இங்கிலாந்து அணி வெற்றி பெற உதவும் என்று நான் கருதுகிறேன். ஜோ ரூட், மார்க் வுட், ஜானி பெர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் ஆகிய ஐபிஎல் புகழ்பெற்ற வீரர்கள் அணியில் உள்ளனர்.

இது பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்து நிச்சயம் அணி தொடரை வெல்ல உதவும் என்று நான் கருதுகிறேன். தற்போது பென் ஸ்ட்ரோக்ஸ் மற்றும் மெக்கெல்லம் தலைமையிலான இங்கிலாந்தணி மிகவும் வலுவாக உள்ளது. இவர்கள் தலைமையில் இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே வெற்றிக்கு இவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார். சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.