இலங்கை டி20ஐ தொடரில் விராட் கோலி இல்லை ; பல மாதங்கள் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் சி.எஸ்.கே வீரர்

0
4679
Virat Kohli Ind vs Sl T20I Series

இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டி கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. அந்த தொடரை 3-0 என்கிற கணக்கில் இந்திய அணி அபாரமாக கைபற்றி அசத்தியது.

ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் தற்பொழுது 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2ஆவது டி20 போட்டி நடைபெற இருக்கின்றது.

- Advertisement -

டி20 தொடர் நடந்து முடிந்ததும் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது. பின்னர் மார்ச் மாதம் 4ஆம் தேதியிலிருந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதும் குறிப்பிடதக்கது.

ரவீந்திர ஜடேஜாவின் கம்பேக்

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடினார். அதன் பின்னர் காயம் காரணமாக எந்தவித சர்வதேச போட்டியிலும் அவர் பங்கு கொள்ளவில்லை. காயம் காரணமாக நீண்ட காலம் அவர் ஒய்வு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது காயம் குணமடைந்து முறையான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வரும் மீண்டும் விளையாட தயாராகி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் மீண்டும் இந்திய அணியில் களமிறங்க போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிவந்த செய்தியின் அடிப்படையில் 2 மாதங்களாக எந்தவித சர்வதேச போட்டியிலும் பங்கு கொள்ளாத அவர் வருகிற பிப்ரவரி 24 அன்று மீண்டும் அவர் இந்திய அணியில் களமிறங்க போகும் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

- Advertisement -

ஓய்வு எடுத்து கொள்ள இருக்கும் கோலி

ஒருபக்கம் ஜடேஜா மீண்டும் இந்திய அணியில் விளையாட போகும் வேளையில் விராட் கோலி அந்த ( இலங்கை அணிக்கு எதிரான டி20) தொடரில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அனைத்துவித சர்வதேச போட்டியிலும் எந்தவித விடுப்பின்றி தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலி ஒய்வு எடுத்த கொள்ளவே அந்த டி20 தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் என்றும் கூடுதல் தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.