தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன் விராட் கோலி இல்லை – டேனிஷ் கனேரியா கூறிய மற்றொரு வீரர் யார் ?

0
310
Virat Kohli and Danish Kaneria

இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டன் என்னும் பெயரை இன்னும் சில டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பெற்று விடுவார். அவ்வளவு சிறப்பாக டெஸ்ட் அணியை கோலி வழிநடத்தி வருகிறார். ஒரு நாள் அணியையும் சிறப்பாகவே வழிநடத்தி வருகிறார். ஒரு பெரிய கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் ஒவ்வொரு தொடரிலும் தனது அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றுவிடுகிறார் விராட். தற்போது முடிந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரில் கூட இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார் கோலி.

ஆனால் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டான் டேனிஷ் கனேரியாவை பொறுத்தவரை தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்த கேப்டன் கோலி இல்லை. பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் இது குறித்து பேசும்போது என்னை பொருத்தவரை நியூசிலாந்து அணியின் தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சன் தான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக கடந்த ஐந்து வருடமாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரைக்கும் சென்றது. நடுவரின் தவறான தீர்ப்பால் நூலிழையில் உலகக்கோப்பை வாய்ப்பை நியூசிலாந்து அணி இழந்தது. அப்போதே நடுவரின் தீர்ப்புக்கு எதுவும் விமர்சனம் செய்யாத வில்லியம் சென்னை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். எதற்கும் பெரிதாக அலட்சியம் செய்து கொள்ளாமல் சிரித்த முகத்துடனே இருக்கும் வில்லியம்சனை பிடிக்காத ரசிகர்களே இழுக்க முடியாது என்ற அளவிற்கு பலருக்கு செல்லப் பிள்ளையாகி விட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வலுவான இந்திய அணியை வீழ்த்தி தனது அணியை சேம்பியன் ஆக்கினார். வெறும் கேப்டன்சியோடு நில்லாமல் பேட்டிங்கிலும் அசத்து வருபவர் வில்லியம்சன். உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் அற்புதமாக அரைசதம் அடித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார்.

இப்படி வெற்றியின் மீது வெற்றியாக சமீபத்தில் குவித்து வரும் கேன் வில்லியம்சன் தான் தற்போதைய உலகின் சிறந்த கேப்டன் என்று டேனிஷ் கனெரியா கூறியுள்ளார்.

- Advertisement -