கில் இங்க வா நில்லு நான் சொல்றத கேளு.. உடனே விக்கெட் எடுத்து கொடுத்த விராட்.. களத்தில் செம சம்பவம்

0
491
Gill

இன்று ஆஸ்திரேலியா அடுத்து எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களத்தில் இந்திய கேப்டன் கில்லுக்கு விராட் கோலி சிறப்பான ஆலோசனைகளை தந்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளை தோற்று தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் தொடரை முழுமையாக இழக்கக்கூடாது என இந்திய அணி தீவிரமாக போராடி வருகிறது.

- Advertisement -

மீண்டும் தோற்ற இந்திய அணி

இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி டாஸ் தோற்றது. முதல் இரண்டு போட்டிகளில் டாஸ் வென்று பந்து வீசிய காரணத்தினால் ஆஸ்திரேலியா அணி முதல்முறையாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இது இந்திய அணிக்கு கொஞ்சம் சாதகத்தை உருவாக்கியது.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஸ் 50 பந்துகளில் 41 ரன், டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல துவக்கம் கொடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து மேத்யூ ஷார்ட், ரென்ஷா சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சி செய்தார்கள்.

- Advertisement -

விராட் கோலி செய்த மேஜிக்

இந்த நிலையில் களத்தில் சென்று கொண்டிருந்த கேப்டன் கில்லை தடுத்து நிறுத்தி விராட் கோலி நீண்ட ஆலோசனைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அடுத்த ஓவரில் பீல்டிங்கை கேப்டன் கில் மாற்றினார். விராட் கோலியை ஷார்ட் ஸ்கொயர் லெக் பகுதிக்கு கொண்டு வந்தார்.

இதையும் படிங்க : சாக்குப் போக்கு சொல்லாம உண்மையை ஒத்துக்கணும்.. இந்திய அணியின் தோல்விக்கு அவர்கள்தான் காரணம் – மைக்கேல் கிளார்க் கருத்து

இதைத் தொடர்ந்து மேத்யூ ஷார்ட் வாஷிங்டன் சுந்தர் பந்தை ஸ்வீப் ஷாட் அடிக்க, காற்றில் வேகமாக வந்த பந்தை விராட் கோலி அற்புதமாக கேட்ச் பிடித்து விக்கெட்டை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு நல்ல திருப்புமுனை ஏற்பட்டது. விராட் கோலியின் ஆலோசனை அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை கொடுத்தது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -