சாக்குப் போக்கு சொல்லாம உண்மையை ஒத்துக்கணும்.. இந்திய அணியின் தோல்விக்கு அவர்கள்தான் காரணம் – மைக்கேல் கிளார்க் கருத்து

0
220

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டி குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து முதலில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து தொடரையும் இழந்துள்ளது. எனவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் சம்பிரதாய கடைசி போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியை கட்டாயம் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை பெற முயற்சிக்கும்.

இந்த சூழ்நிலையில் தற்போதைய இந்திய அணி குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார். அதாவது இந்திய அணி சிறப்பாக செயல்பட முடியாத அளவுக்கு ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் அவ்வளவு சவால் இல்லை எனவும் தரமான வீரர்கள் இல்லாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் எனவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. நிஜமாகவே என்ன காரணம் என்று தெரியவில்லை. போட்டி நடந்த இரண்டாவது ஆடுகளம் அவ்வளவு கடினமாக இல்லை என்று தோன்றுகிறது. இரண்டாவது நாளில் மழை பெய்து கொண்டிருந்தது. ஒருவேளை அதற்கு முந்தைய நாள் பயிற்சி செய்யும்போது ஏதேனும் சிரமங்களை இந்திய வீரர்கள் எதிர்கொண்டிருக்கலாம். மேலும் தற்போது கடைசி ஆட்டம் மட்டுமே உள்ளது அதற்குப் பிறகு இந்திய அணி டி20 தொடருக்கு விளையாட உள்ளது. மூன்று வடிவத்திலுமே இந்திய அணி சிறப்பாக உள்ளது என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:நான் பந்தயம் கட்டி சொல்றேன்.. விராட் கோலி நாளைக்கு அந்த பேயை ஜெயிப்பார் – அபிஷேக் நாயர் பேச்சு

இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை என்றுதான் நான் கூறுவேன். இந்தியாவில் அவர்களுக்கு கிடைக்கும் நிலைமைகளுக்கு மாறாக, வேறு மாதிரியான சூழல்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அவர்கள் மிக மோசமான சூழ்நிலைகளை அனுபவித்திருக்கிறார்கள். இதனால் சாக்குப் போக்கு எதுவும் சொல்ல முடியாது. நிச்சயமாக இந்திய அணி இரண்டு தரமான வீரர்களான பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோரை இழந்திருக்கிறது. அவர்கள் இருவரும் உடல் தகுதியுடன் இருந்தால் இந்திய அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கிளார்க் பேசியிருக்கிறார்.

- Advertisement -