பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – வீடியோ இணைப்பு!

0
672

ஈடன் கார்டன் மைதானத்தில் குத்தாட்டம் போட்ட இஷான் கிஷன், விராட் கோலி இருவரின் வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

இலங்கை அணியுடன் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இரண்டாவது போட்டி ஈடன் கடன் மைதானத்தில் நடைபெற்றது. சிறந்த ஃபார்மில் இருக்கும் விராட் கோலியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலர் ஆவலுடன் வந்தனர். துரதிஷ்டவசமாக, 9 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்துவிட்டார்.

- Advertisement -

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்கள் அடித்திருந்தது. அதை சேஸ் செய்த இந்திய அணி தட்டு தடுமாறியபோது கே எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இலக்கை எளிதாக்கி விட்டு ஹர்ததிக் பாண்டியா 36 ரன்களில் அவுட்டானார். இறுதிவரை களத்தில் இருந்த கேஎல் ராகுல் 103 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்துவிட்டு பெவிலியன் திரும்பினார். இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

விராட் கோலியின் பேட்டிங் பார்க்க வந்த ரசிகர்களுக்கு அன்று ஏமாற்றமாக இருந்தது. ஆனால் திரும்பிச் செல்லும் பொழுது அவர்களை விராட் கோலி ஏமாற்றவில்லை. தனது டான்ஸ் மூலம் மகிழ்வித்து அனுப்பி இருக்கிறார்.

- Advertisement -

ஆம், போட்டி முடிந்த பிறகு டிரெஸ்ஸிங் ரூம் சென்று கொண்டிருந்த விராட் கோலி, அப்போது மைதானத்தில் இசைக்கப்பட்ட இசைக்கு இஷான் கிஷன் ஆடத் துவங்க, அவருடன் நடந்து வந்து கொண்டிருந்த விராட் கோலியும் சேர்ந்து ஆட ஆரம்பித்தார். இந்த காட்சியை கண்டவுடன் ரசிகர்கள் அதீத உற்சாகத்திற்கு சென்றனர். இருவரின் டான்ஸை வீடியோ எடுத்து இணையதளத்தில் ரசிகர் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். அது வைரல் ஆகியுள்ளது.