ஐபிஎல் ஆட்டநாயகன் விருது: தல தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி

0
97
Dhoni and Kohli

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்தப் போட்டியில் விராட் கோலி 77 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 மூவர்கள் 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஷிகார் தவான் 45 ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை துரத்திய பெங்களூர் அணி 19.2வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 178 ரன்கள் குவித்து வெற்றி இலக்கினை எட்டியது.

- Advertisement -

இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பங்கேற்று விராட் கோலி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 21 ரன்கள் குவித்தார். பின்னர் இரண்டாம் போட்டியில் அபாரமாக விளையாடி 77 ரன்கள் குவித்ததோடு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

எனவே அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதற்காக விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் முதலிடத்தில் இருக்கிறார். இவர் 25 முறை அட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயகன் விருது பெற்றதன் மூலம் விராட் கோலி சென்னை அணியின் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்திருக்கிறார். அதாவது தோனி ஐபிஎல் வரலாற்றில் 17 முறை ஆட்டநாயகன் விருது பெற்று இருக்கிறார். இதுவரை 16 முறை ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி இந்த போட்டியில் அதிக ரன்கள் குவித்ததன் மூலமாக எம் எஸ் தோனியின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதில் இந்திய வீரர்களில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார். இவர் 19 முறை விருது வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 22 முறை வென்று இரண்டாவது இடத்திலும், ரோகித் சர்மா மூன்றாவது இடத்திலும், டேவிட் கார்னர் 18 முறை வென்று நான்காம் இடத்திலும், விராட் கோலி மற்றும் எம் எஸ் தோனி ஆகியோர் ஐந்தாம் இடத்திலும், யூசுப் தான் 16 முறை வென்று ஆறாவது இடத்திலும் இருக்கின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியல்

1.ஏபி டிவில்லியர்ஸ்- 25
2.கிறிஸ் கெயில்- 22
3.ரோஹித் சர்மா -19
4.டேவிட் வார்னர் -18
5.எம் எஸ் தோனி-17
5.விராட் கோலி- 17
6.யூசுப் அதான் -16