தவான் போல் தோற்றமளித்த ரசிகர்.. அடக்க முடியாமல் சிரித்த கோலி.. கலகலப்பான ஐபிஎல் மைதானம்

0
833

17 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி வெற்றிகரமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு விளையாட்டு என்பதை தாண்டி மக்களின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதில் அதிக ரசிகர்களைக் கொண்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடன் தோல்வி தழுவியது. இந்நிலையில் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை பெங்களூர் அணி எதிர்கொண்டது.

- Advertisement -

தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி கணக்கை தொடங்க ஆயத்தமான பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இருபது ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து இருந்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார்.

பின்னர் 177 ரன்கள் குவித்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி மற்றும் இறுதி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி அணியினை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். விராட் கோலி 77 ரன்களும் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் குவித்தது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து இப்போட்டியில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 18 வது ஓவரில் விராட் கோலி எல்லைக்கோட்டின் அருகே நின்று பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து ரசிகர்கள் கூப்பிட, பின்னால் திரும்பி கையை அசைத்த விராட் கோலி பஞ்சாப் அணியின் கேப்டன் சிகார் தவான் போன்று இருந்த ரசிகர் ஒருவரை பார்த்து ஆச்சரியமடைந்தார்.

- Advertisement -

பின்னர் இது சிகார் தவான் இல்லை ரசிகர் ஒருவர் என்று உணர்ந்த பிறகு சிரிப்பை அடக்க முடியாமல் விராட் கோலி சிரித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அச்சு அசல் சிகர் தவானை போன்று அந்த ரசிகர் இருந்ததால் மற்ற ரசிகர்களும் அவரை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

இதையும் படிங்க: ஒவ்வொரு வருஷமும் வெட்கமா இருக்கு.. இனி அப்படி கூப்பிடாதிங்க – விராட் கோலி ரசிகர்களுக்கு ரிக்வெஸ்ட்

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றதோடு அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு நிற தொப்பியையும் கைப்பற்றினார். இரண்டு மாதங்கள் இடைவெளியில் மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடினாலும் அவரது ஆட்டம் எந்த விதத்திலும் குறையவில்லை என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.