வீடியோ- விராட் கோலியின் வெறித்தன கேட்ச்! நடையை காட்டிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்

0
574

வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பெற்றாலும் அது ரசிகர்களுக்கு திருப்திகரமாகவே அமையவில்லை. அதற்கு காரணம் இந்திய அணி 115 ரன்கள் என்ற இலக்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு வெல்லும் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் இந்திய அணியோ ஐந்து விக்கெட்டுகளை இழந்து 22.5 வது ஓவரில் தான் வெற்றி இலக்கை எட்டியது. இதற்கு ஆடுகளம் மோசமாக இருந்ததே காரணம் என கூறப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு 170 அல்லது 200 ரன்களை அடித்து இருந்தால் நிச்சயம் இந்திய அணி தோற்க கூட வாய்ப்பு இருந்திருக்கும்.

- Advertisement -

அந்த அளவிற்கு இந்திய அணியும் பேட்டிங் செய்யும்போது தடுமாறியது. இதற்கு காரணம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் தான். இதனால் இரு அணி வீரர்களாலும் பேட்டிங் செய்யவே முடியவில்லை.

இந்த நிலையில் தான் விராட் கோலியின் ஒரு செய்கை ஆட்டத்தில் போக்கையே மாற்றி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரராக விளங்கும் ரொமேரியோ செப்பர்ட் சுழற் பந்து வீச்சை பொளக்க கூடிய பந்துவீச்சாளராக  இருக்கிறார். இந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சை அவர் அடித்த ஆட முற்பட்டார்.

ரோமேரியோ எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேய அவர் பெரிய ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து எட்ஜ் ஆகி மூன்றாவது ஸ்லிப் அருகே சென்றது. அங்கு நின்று கொண்டிருந்த விராட் கோலி திடீரென்று ஒரே கையில் பாய்ந்து கேட்ச் பிடித்து   ஆட்டமிழக்க வைத்தார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், இந்த ஒரு கேட்ச் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது . ரொமேரியோ அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்திருந்தால், ஒரு வேலை இந்திய அணி தோல்வியை கூட தழுவி இருக்கலாம் .

இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி பேட்டிங் செய்ய வரவில்லை. மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்திருந்தார். எனினும் பில்டிங் மூலம் தன்னுடைய இருப்பை விராட் கோலி ரசிகர்களுக்கு காட்டிவிட்டார்.

தற்போது இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.