நீ கிங்கு தான்… சர்வதேச கிரிக்கெட்டில் பலரும் நெருங்க முடியாத சாதனை படைத்த கிங் கோலி.. இதுவரை 4 இந்தியர்கள் மட்டுமே செய்த ரெக்கார்ட்!

0
5044

சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகள் விளையாடி பெரிய சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இந்த சாதனையை படைத்த நான்காவது இந்திய வீரராகவும் இருக்கிறார். யார் யார் இந்த பட்டியலில் இருக்கிறார்கள் என்பதை பின்வருமாறு காண்போம்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார். பேட்டிங்கில் இவர் படைத்த சாதனைகள் பல இன்றளவும் முறியடிக்க முடியாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அரைசதங்கள் பட்டியலிலும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார். பேட்டிங்கில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இப்போது டாப் 5 பட்டியலில் இருக்கிறார்.

2008ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் பயணித்து வரும் விராட் கோலி, 2014 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகவும் 2017 ஆம் ஆண்டு முதல் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் பயணித்து வந்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு அனைத்துவித போட்டிகளிலும் இருந்து தன்னுடைய கேப்டன் பொறுப்பை துறந்தார்.

கடந்த மூன்று வருடங்களாக பார்மில் இல்லாமல் இருந்து வந்த விராட் கோலி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தார். 2022 ஆம் ஆண்டு ஆசியகோப்பை தொடரின் போது சதம் அடித்து ஆரம்பித்த இவர் மீண்டும் தன்னுடைய பார்மை திரும்பபெற்று டி20 உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை என வரிசையாக மிகப்பெரிய தொடர்களில் அதிக ரன்களை குவித்தார்.

- Advertisement -

தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் விராட் கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றதன் மூலம் 500 ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். ஒட்டுமொத்தமாக 500 சர்வதேச போட்டிகள் விளையாடிய பத்தாவது வீரராக இருக்கிறார். இந்திய வீரர்கள் மத்தியில் நான்காவது வீரராக இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 500 பிளஸ் போட்டிகள் விளையாடிய இந்திய வீரர்கள்:

  1. சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகள்
  2. எம் எஸ் தோனி – 538 போட்டிகள்
  3. ராகுல் டிராவிட் – 509 போட்டிகள்
  4. விராட் கோலி – 500* போட்டிகள்

மூன்றுவித போட்டிகளிலும் 100 பிளஸ் போட்டிகள் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் வரலாறையும் படைத்திருக்கிறார் விராட் கோலி. நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 பிளஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.