கடைசி ஓவரில் நான் டென்ஷனா இருந்தேன்; யார்க்கர் பந்து போடு பேட்ஸ்மேனை அவுட் பண்ணலான்னு எனக்கு பிளானை சொன்னதே விராட் கோலி தான் – தாக்கூர் பேட்டி!

0
13022

நான் டென்ஷனாக இருந்தபோது, விராட் கோலி யார்க்கர் போடவேண்டும் என்று சரியான நேரத்தில் என்னை அறிவுறுத்தினார் என ஷர்த்துல் தாக்கூர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி பன்னிரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி வைத்து 350 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி சேஸ் செய்ய களமிறங்கிய போது ஒரு கட்டத்தில் 131 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது

- Advertisement -

அப்போது சான்ட்னர் மற்றும் ப்ரேஸ்வெல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து படுதோல்வியில் இருந்து மீட்டனர். 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கிட்டத்தட்ட வெற்றி பெறமுடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்தனர்.

கடைசி 3 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்பட்டபோது, அதிரடியாக விளையாடி 6 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்கிற நிலைக்கு வந்தனர். முதல் பந்தே ப்ரேஸ்வெல் சிக்ஸர் அடித்து ஆட்டம் காட்டினார்.

தாக்கூர் அடுத்த பந்தே யார்க்கர் போட்டு, விக்கெட் எடுத்தார். இதன் முலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

போட்டி முடிந்த பின் பேட்டியளித்த தாக்கூர், இது விராட் கோலி கொடுத்த பிளான் என கூறியது ஆச்சர்யப்படுத்தியது. தாக்கூர் கூறியதாவது:

“நான் மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து, யார்க்கர் லேந்த்தில் பந்துவீசு விக்கெட் எடுத்துவிடலாம் என அறிவுறுத்தினார். எனக்கு சரியென பட்டது. வீசிட்டேன்.” என்றார்.

- Advertisement -