விராட் கோலி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்கான காரணம் இது தான்

0
2013
Virat Kohli and Umpire

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. மூன்றாவது போட்டி மிக மோசமான தோல்வியை இந்திய அணிக்கு பரிசாக கொடுத்தது. அதன் காரணமாக 4வது டெஸ்டில் இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்தது போல் அமையாததால் முதல் இன்னிங்சில் பாதியிலேயே ரசிகர்கள் சோகத்திற்கு சென்று விட்டார்கள்.

மிடில் ஆர்டர் வீரர்களோடு இணைந்து இந்த முறை துவக்க வீரர்களும் சேர்ந்து சொதப்ப, இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 57 ரங்கனும் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆக்கிய நிம்மதியில் இங்கிலாந்து அணி பேட்டிங் ஆட வந்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி வீரர் ஹசீப் ஹமீத் பேட்டி காண வரும் பொழுது இந்திய அணி கேப்டன் விராட்கோலி அம்ப்பயரிடம் சென்று ஏதோ முறையிட்டார் அவரின் முக பாவனைகளை பார்க்கும் பொழுது ஹமீதின் ஏதோ ஒரு செயல் அவரை கோபமூட்டியதாக தெரிந்தது.

கிரிக்கெட் பிட்ச்சில் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று ஒரு செவ்வக வடிவிலான பகுதி இருக்கும். அதில் ஓடுவது அல்லது பேட்டை கொண்டு அடிப்பதோ அல்லது கார்டு எடுப்பது போன்ற செயல்களை செய்தல் கூடாது என்று விதி உள்ளது. ஆனால் அரசின் ஹமீத் இந்த பகுதியில் சென்று தான் கார்டு எடுத்துக் கொண்டார். இதனால் கோபமடைந்த கேப்டன் விராத் கோலி அம்ப்பயரிடம் சென்று முறையிட்டார்.

கடந்த டெஸ்டில் ரிஷப் பண்ட் இதேபோன்று களத்திற்கு நன்கு முன்னால் இறங்கி வந்து ஆடும் பொழுது பாதுகாக்கப்பட்ட பகுதியில் இவர் ஆடுகிறார் என்று அம்பயர் பண்ட்டிற்கு வார்னிங் கொடுத்தார். அதேபோல தற்போது மீது ஆடும் போது ஏன் கொடுக்கவில்லை என்று கேப்டன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இங்கிலாந்து அணியின் முக்கிய வீரராக ஜோ ரூட் விக்கெட்டை ஏற்கனவே எடுத்துவிட்ட நிலையில் இந்திய அணி இன்று சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்த டெஸ்டை வென்று தொடரில் முன்னிலை பெறலாம்.

- Advertisement -